»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மும்பை தாதாக்களுடன் தொடர்பு கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளதயாரிப்பாளர் நசீம் ரிஸ்வி வழக்கில், திரைப்படங்களுக்கு பைனானஸ் செய்பவரும்,வைர வியாபாரியுமான பரத் ஷா குற்றப்பிரிவு போலீஸாரால் தொடர்ந்து 2-வதுநாளாக விசாரிக்கப்பட்டார்.

பரத் ஷா சமீபத்தில், பைனான்ஸ் செய்த சுப்கே சுப்கே சோரி சோரி என்ற இந்திப்படத்தின் தயாரிப்பாளர் நசீம் ரிஸ்வி 13-ம் தேதி கிரிமினல் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.

மும்பை தாதாக்களிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, நடிக, நடிகையரைமிரட்டி கால்ஷீட் வாங்கியதாக இவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. அவரை 27-ம் தேதிவரை போலீஸ் காவலில் வைக்கும் படி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சுப்கே சுப்கே சோரி சோரி படத்தைத் தயாரிக்க தாதாக்கள்தான் பண உதவிசெய்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமைகுற்றப்பிரிவு அதிகாரிகளால் இவர் விசாரிக்கப்பட்டார்.

படத்தின் நாயகன் நடிகர் சல்மான் கான் மற்றும் இயக்குநர்கள் அப்பாஸ், மஸ்தான்ஆகியோரையும் போலீஸார் விசாரித்தனர்.

குற்றம் சாட்டப்படவர்கள் மிகுந்த பாதுகாப்புடன் குற்றப்பிரிவு தலைமைஅலுவலகத்திற்கு நள்ளிரவு அழைத்து வரப்பட்டனர். புலன் விசாரணை பிரிவுஅதிகாரிகள் தீவிர விசாணை மேற்கொண்டனர். விசாரணை குழுவுக்கு துணை போலீஸ்கமிஷனர் சங்கர் காம்ப்ளே தலைமை தாங்கினார் என காவல் துறை வட்டாரங்கள்தெரிவித்தன.

குறித்து காவல்துறை உயர் அதிகாரி சிங் வெள்ளிக்கிழமை கூறுகையில், ரிஸ்விஇப்போது கைது செய்யப்பட்டுள்ள சட்டப்பிரிவின் கீழ் இந்திய சட்டப்பிரிவின் கீழ்வராத பல்வேறு குற்றங்கள குறித்தும் விசாரிக்க முடியும் என்றார்.

இதற்கிடையே, சுப்கே சுப்கே சோரி சோரி படத்தின் நெகடிவ்களை போலீஸார்பறிமுதல் செய்துள்ளனர்.

யு.என்.ஐ.

Read more about: bharatshah, cinema, enquiry

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil