»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கவிஞர் வைரமுத்து எழுதிய "கள்ளிக்காட்டு இதிகாசம்" நாவலைப் படமாக்கப் போவதாக டைரக்டர் பாரதிராஜாகூறியுள்ளார்.

"ஆனந்த விகடன்" வார இதழில் தொடராக வந்தது "கள்ளிக்காட்டு இதிகாசம்". இதை புத்தக வடிவில் கொண்டுவந்துள்ளார் வைரமுத்து.

இதன் நூல் வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை நடந்தது. புத்தகத்தை திமுக தலைவர் கருணாநிதிவெளியிட்டார். டைரக்டர் பாரதிராஜா பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் செல்வேந்திரன், கு. ஞானசம்பந்தன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில்,

இந்த நூலிலே துவையல் அரைப்பது பற்றி அழகாக எழுதியிருக்கிறார் வைரமுத்து. அதைப் பற்றி எனக்குச் சந்தேகம்வந்தது. "இதை நீங்கதான் எழுதினீங்களா அல்லது தங்கை பொன்மணி சொன்னதா?" என்று கேட்டேன். அதற்குஅவர், "இல்லை, இல்லை நானேதான் எழுதினேன்" என்றார். அவரது வீட்டிலும் அவர்தான் இதைச் செய்கிறார்போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

இதேபோல கந்து வட்டியின் கொடுமையை தத்ரூபமாக கொண்டு வருகிறார். மதுரை மாவட்டத்திலே இந்த கந்துவட்டிக் கொடுமை இன்றும் இருக்கிறது.

இதுபோல சின்னச்சின்ன விஷயங்களிலிருந்து, கிராமங்களில் இன்னும் உலவி வரும் கலாசாரம் வரைஅனைத்தையும் தனது எழுத்தில் கொண்டு வந்துள்ளார் வைரமுத்து. இவையெல்லாம் இன்னும் நமது கிராமங்களில்வாழும் புதைக்கப்படாத கலாச்சாரங்கள்.

சமீபத்திலே வைரமுத்து மீதும், பொன்மணி மீதும் புகார் வந்தது. அவர்களுக்கு திமுக ஆட்சிக்காலத்தில் ஒன்றரைகிரவுண்ட் நிலத்தை முறைகேடாக வழங்கி விட்டார்கள் என்று. இவ்வாறு பேசுபவர்கள் நான்கு கோடிபெறுமானமுள்ள டான்சி நிலத்தை ஒன்னே கால் கோடி கொடுத்து வாங்கியவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.தம்பி வைரமுத்து கொண்டுள்ள ஆற்றலுக்கும், திறமைக்கும் ஒன்றரை கிரவுண்ட் நிலம் போதாது, ஊரையே கொடுக்கவேண்டும் என்று மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன் என்றார் கருணாநிதி.

பாரதிராஜா பேசும்போது,

இந்த இதிகாசத்தைப் படித்துப் பார்த்து விட்டு மூன்று முறை அழுதேன். இதில் எனது வாழ்க்கையும் அடங்கியுள்ளது.இதே கள்ளிக்காட்டுக்குச் சொந்தக்காரன் என்ற வகையில் எனது வாழ்க்கை இங்கே படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதுஎனக்குச் சொந்தமானது.

காலம் கடந்தும் வாழ்ந்திருக்கிறார் சகோதரர் வைரமுத்து. அன்று இவரை அந்தக் கள்ளிக்காடு பிரசவித்தது. இன்றுஅவர் கள்ளிக்காட்டையே பிரசவித்திருக்கிறார். இப்படி எழுத இவரால் மட்டுமே முடியும்.

இதை செல்லுலாய்டில் கொண்டு வர என்னால் மட்டுமே முடியும். அதேபோல, இதற்கு இசையைமக்க இதேகள்ளிக்காட்டுக்குச் சொந்தக்காரனான, அந்த மண்ணின் ரத்தம், சதையுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறஇளையராஜாவால் மட்டுமே முடியும். இது எங்கள் மூவருக்கும் மட்டுமே சொந்தம். நிச்சயம் இதை படமாக்குவேன்என்றார் பாரதிராஜா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil