»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிற மொழி இயக்குநர்களும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் சேரலாம்என்று அச் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா தெரிவித்தார்.

தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இப்போது தமிழ்நாடு திரைப்படஇயக்குநர்கள் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றக்கிழமைநடைபெற்றது. இக் கூட்டத்தில் பாரதிராஜா பேசியதாவது:

என் தாயை நான் தாய் என்றும் தந்தையை தந்தை என்றும் அழைப்பதற்கு நான்யாரிடமும் கேட்க வேண்டியதில்லை. அது போலத்தான் நமக்குத் தாயாக விளங்கும்இந்த சங்கத்தை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் பெயர்மாற்றியிருக்கிறோம்.

சற்று காலதாமதமானாலும் நல்லவிதமாக இந்த பெயர் மாற்றம் நடந்துள்ளது. இச்சங்கத்தின் சார்பில் பழம்பெறும் இயக்குநர்களுக்குப் பாராட்டு விழா நடத்தஉள்ளோம்.

இச் சங்கத்துக்கு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் என்று பெயர் வைக்கவில்லை.தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்று தான் பெயர் வைத்துள்ளோம்.

ஆகவே, பிற மொழி இயக்குநர்களும் இச் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேரலாம்என்றார் பாரதிராஜா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil