»   »  'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'!

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் பெரும் வெற்றிப் பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல். மம்முட்டி, நயன்தாரா நடித்த இந்தப் படத்தை, தமிழில் ரஜினியை வைத்து ரீமேக் செய்ய ஒரு முயற்சி நடந்தது கபாலிக்கு முன்பு. அது நடக்கவில்லை.

Baskar Oru Rascal

இப்போது அந்தப் படத்தை பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் உருவாக்கி வருகிறார்கள். அரவிந்த் சாமி, அமலா பால் நடிக்கிறார்கள். நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப் ஷிவ்தசானி நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேலும் நடிக்கிறார்.

தற்போது சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், படத்தின் ஒரு பாடல் காட்சி படமாக்க மாலத் தீவுக்குச் செல்கின்றனர்.

இப்படத்தை சித்திக் இயக்குகிறார். ரமேஷ் கண்ணா வசனம் எழுத, அம்ரேஷ் இசையமைக்கிறார்.

English summary
Malayalam Blockbuster Baskar the Rascal is coming to Tamil in the name of Baskar Oru Rascal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil