Don't Miss!
- Finance
அதானி குழுமத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டி பார்த்த ஹிண்டர்ன்பர்க்.. 3 நாளில் 29% மதிப்பு சரிவு!
- News
பழிக்கு பழி வாங்கிட்டோம்.. பாகிஸ்தான் பெஷாவர் மசூதி தாக்குதலுக்கு காரணம் சொன்ன தெஹ்ரிக்-இ-தாலிபான்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
மார்வெல் உலகில் இணைந்த பேட்மேன் நடிகர்.. இடி கடவுளின் தோர் லவ் அண்ட் தண்டர் டீசர் எப்படி இருக்கு?
லாஸ் ஏஞ்சல்ஸ்: தானோஸ் தலையையே வெட்டி சாய்த்த தோர் கடவுள் கொஞ்சம் தன்னையே தேடும் முயற்சியில் காதல் வலையில் எப்படி விழுகிறார் பின்னர் மறுபடியும் இடி கடவுளாக மாறி எதிரிகளுக்கு தர்ம அடி கொடுக்கப் போகிறாரா? என்கிற கேள்விகளுடன் வெளியாகி உள்ளது புதிய Thor: Love and Thunder படத்தின் அட்டகாசமான டீசர்.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான டார்க் நைட் ரைசஸ் படத்தில் பேட்மேனாக நடித்து பட்டையைக் கிளப்பிய பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் பேல் இந்த படம் மூலம் மார்வெல் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
மேலும், பல ஆச்சர்யங்களுடன் ரசிகர்களை மகிழ்விக்கப் போகும் தோர் லவ் அண்ட் தண்டர் படத்தின் டீசர் வெளியாகி மில்லியன் கணக்கில் வியூக்களை அள்ளி வருகிறது.
பெப்சி
ஊழியர்களுக்காக
விஜய்
எடுத்த
முயற்சி...நெகிழ்ச்சியில்
தொழிலாளர்கள்!

இடி கடவுள்
மார்வெல் திரையுலகின் மிகப்பெரிய சூப்பர் ஹீரோவான தோர் அவெஞ்சர்ஸ் உடன் இணைந்து தானோஸை வீழ்த்தவும் பூமியை காப்பாற்றவும் நிறைய போராட்டங்களையும் செய்து களைத்துப் போய்விட்டார். சமீபத்தில் வெளியான தோரின் சகோதரர் லோகியின் வெப்சீரிஸ் பெரிய வெற்றி அடைந்த நிலையில், அடுத்ததாக இடி கடவுளின் தோர் லவ் அண்ட் தண்டர் படத்திற்கு ஹாலிவுட் ரசிகர்கள் அத்தனை ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்
தோர் கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து அசத்தி வருகிறார் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். இந்த படத்திற்கும் தனது உடலை செம ஃபிட்டாக வைத்துக் கொண்டு தனது நடிப்பால் அசத்த உள்ளார். எந்த ஒரு பிளானுமே இல்லாத கடவுளாக இந்த பார்ட்டில் தோர் கடவுள் என்ன பண்ணப் போகிறார் என்றும் அவரது காதல் போர்ஷன்கள் படத்தில் எந்தளவுக்கு கை கொடுக்கும் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து வருகின்றனர்.

கிறிஸ்டியன் பேல்
நம்ம ஊர் சியான் விக்ரமைப் போல ஹாலிவுட்டில் தனது உடம்பை உருக்கி நடிக்கும் நடிகர் தான் கிறிஸ்டியன் பேல் என்பது அனைத்து ஹாலிவுட் ரசிகர்களுக்கும் தெரிந்த விஷயம் தான். நோலன் இயக்கத்தில் வெளியான டார்க்நைட் ரைசஸ் திரைப்படத்தில் பேட்மேனாக நடித்து அசத்தியவர் கிறிஸ்டியன் பேல். டிசி ரசிகர்களின் ஃபேவரைட்டான பேட்மேன் படத்தில் நடித்த நடிகர் மார்வெலில் தற்போது களம் காணப் போவது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

வின் டீசர் இருக்காரா
கார்டியன் ஆஃப் தி கேலக்ஸியில் நடித்த டேவிட் படிஸ்டா உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்களுடன் வின் டீசலும் சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், நடாலியா போர்ட்மேன், டெசா தாம்ப்ஸன் உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

டீசர் எப்படி இருக்கு
குடித்து விட்டு தொப்பையும் தொந்தியுமாக இருக்கும் தோர் மீண்டும் உடற்பயிற்சி செய்து தனது உடம்பை சிக்ஸ்பேக்கிற்கு மாற்றுகிறார். மேலும், தவம் செய்து தன்னை தேட முயற்சி செய்கிறார். அதற்கு இடையே ஹீரோயின் உடன் ரொமான்ஸ் செய்து லிப் லாக் கிஸ் எல்லாம் அடித்து ஜாலியாக சென்று கொண்டிருக்கும் போது, அவருக்கு புதிதாக கிளம்பும் எதிரியை சமாளிக்க எப்படி மீண்டும் இடி கடவுளாக மாறி துவம்சம் செய்யப் போகிறார் என்பதை விளக்கும் அளவிற்கு இந்த டீசர் வெளியாகி சக்கைப் போடு போட்டு வருகிறது.