twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “பேட்டரி“ இந்த காலகட்டத்திற்கு தேவையான படம்.. நடிகர் சூரி பேச்சு !

    |

    சென்னை : அம்மு அபிராமி மற்றும் செங்குட்டுவன் ஆகியோர் நடிப்பில் மணிபாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேட்டரி'

    Recommended Video

    Hollywood படத்தை இப்படி தான் எடுப்பாங்க | Battery Audio launch

    கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் செங்குட்டுவன் தயாரித்துள்ளார். சித்தார்த் விபின் படத்திற்கு இசையமைத்துள்ளார். தீபக் செட்டி, எம்.எஸ். பாஸ்கர், யோக் ஜபீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய நகைச்சுவை நடிகர் சூரி, இந்த காலகட்டத்திற்கு தேவையான திரைப்படம் என்றார்.

    லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்காக நான் வேலை செய்வது இல்லை.. நச் பதில் கொடுத்த நயன்தாரா!லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்காக நான் வேலை செய்வது இல்லை.. நச் பதில் கொடுத்த நயன்தாரா!

    நடிகை அம்மு அபிராமி

    நடிகை அம்மு அபிராமி

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் முக்கியமானவராக இருக்கிறார் நடிகை அம்மு அபிராமி. தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்திருப்பார். மேலும், விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்தார். இதையடுத்து, அசுரன் திரைப்படத்தில் தனுஷூடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது எனலாம். இதையடுத்து, பேட்டரி திரைப்படத்தில் முதன்முறையாக கதாநாயகி ரோலில் நடித்துள்ளார்.

    பேட்டரி

    பேட்டரி

    இந்நிலையில், பேட்டரி திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் விழாவில் பேசிய, நகைக்சுவை நடிகர் சூரி, இந்த காலகட்டத்திற்கு தேவையான படம் 'பேட்டரி' என்றார். மனுஷனுக்கு ஏதோ உடம்பில் பிரச்சனை என்றால் முதலில் மருத்துவமனைக்குத்தான் செல்வார்கள் அதன் பிறகுதான் கடவுளிடம் முறையிடுவார்கள். ஆனால், இன்றைய சூழ்நிலையில் மருத்துவத்துறை சிலரால் மிகவும் மோசமாகிக்கொண்டே செல்கிறது என்றார்.

    விழிப்புணர்வை ஏற்படுத்தும்

    விழிப்புணர்வை ஏற்படுத்தும்

    பேக்டரி திரைப்படம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இன்றைய காலகட்டத்தில், ஒரு படத்தை பார்க்கவைக்க உயிரை கொடுத்து போராடி வேண்டி உள்ளது. எந்த மாதிரியான திரைப்படத்தை கொடுத்தாலும் கிண்டல் செய்றாங்க, ஒரே போராட்டமா இருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தியேட்டரில் பால்கனியிலிருந்து பார்த்தால், படம் ஓடும் போதே செல் போனை வைத்துக்கொண்டு படம் பார்க்கிறார்கள்.

    நிச்சயம் வெற்றி பெறும்

    நிச்சயம் வெற்றி பெறும்

    தியேட்டருக்கு வருபவர்களை படம் பார்க்கவைப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக உள்ளது. செல் போனை தூக்கி போட்டுவிட்டு படம் பார்க்க வைக்குபடி படம் எடுக்க வேண்டும். அப்படி பட்டபடம் தான் இந்த பேக்டரி. இப்படி ஒரு கதையை கையில் எடுத்த இயக்குநர் மணிபாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார். இந்த படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என்றார்.

    English summary
    Battery Movie Audio and teaser launch function actor soori speech
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X