»   »  கைக்குழந்தைக்கு தாயாக ரேஷ்மி மேனன் நடிக்கும் 'பயமா இருக்கு'!

கைக்குழந்தைக்கு தாயாக ரேஷ்மி மேனன் நடிக்கும் 'பயமா இருக்கு'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேநீர் விடுதி, கிருமி, மாயா, உறுமீன் போன்ற படங்களில் நடித்த ரேஷ்மி மேனன் தனது அடுத்த படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார்.

இப்படம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட நகைச்சுவை கலந்த திகில் திரைப்படமாம். சந்தோஷ், ரேஷ்மி மேனன், கோவை சரளா, நான் கடவுள் ராஜேந்திரன், விஜய் டிவி ஜெகன், லொள்ளு சபா ஜிவா, பரணி போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கேரளாவிலும், இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்து கொண்டிருக்கிறது.

Bayama irukku, a comedy thriller

படத்தின் இயக்குநர் ஜவகருக்கு இது முதல் படம். படம் குறித்து இயக்குநர் கூறுகையில், "நாயகி ரேஷ்மி மேனன் கைக் குழந்தைக்கு அம்மாவாக இப்படத்தில் நடித்திருக்கிறார். திருமணமான பின்பு கணவன் மனைவிக்குள் இருக்கும் காதலை யதார்த்தமாகவும் சிறப்பாகவும் காட்டிள்ளனர் சந்தோஷ் மற்றும் ரேஷ்மி மேனன்.

இப்படத்தில் வரும் வீடு படத்தில் முக்கிய பங்காற்றுகிறது, கேரளாவிலுள்ள இந்த வீட்டிற்கு செல்ல தரைவழி போக்குவரத்து கிடையாது, கிட்டத்தட்ட படகில் 3 மணி நேரம் பயணம் செய்தால்தான் படப்பிடிப்பு நடக்கும் வீட்டிற்கே செல்ல முடியும், அந்தளவுக்கு சிரமப்பட்டு படத்தை எடுத்திருக்கிறோம்.

மேலும் நான் கடவுள் ராஜேந்திரனை இப்படத்தில் முற்றிலும் வேறுவிதமாக பார்க்கப்போகிறீர்கள். நடிப்புக்கு தீணி போடும் விதமாக அவரின் கதாபாத்திரம் அமைந்திருக்கும். ஆரம்பம் முதல் இறுதிவரை கதாநாயகன், கதாநாயகியுடன் இவர் டிராவல் செய்து கொண்டே இருப்பார். கோவை சரளா சாமியார் வேடத்தில் நடித்திருக்கிறார் இவரின் சிஷ்யனாக சேஷு நடித்துள்ளார்," என்றார்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மகேந்திரன், இசை - சி.சத்யா, படத்தொகுப்பு கோவிந்தராஜன், கலை - காளிமுத்து, பாடல்கள் - விவேகா மற்றும் நோலன்.

English summary
Bayama Irukku is a new comedy thriller directed by debutante Jawahar and Reshmi Menon plays young mother role for the first time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil