Don't Miss!
- News
நான் கிரிக்கெட் வீரர்! பவுலர்களை பார்த்து பயந்தால் வேலைக்கு ஆகுமா! அமமுக வேட்பாளர் சிவபிரசாத் பளிச்!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ரச்சித்தா தன்னை ஒழுக்கமா காட்டிக்கிறாங்க..படுமோசமாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
சென்னை : பிக் பாஸ் வீட்டில் ரச்சித்தா தன்னை ஒழுக்கமாக காட்டிக்கிறாங்க என்று பயில்வான் ரங்கநாதன் படுமோசமாக விமர்சித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ரச்சித்தா மகாலட்சுமி. அந்த சீரியலைத் தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம், நாச்சியார்புரம், சொல்ல மறந்த கதை போன்ற சீரியலில் நடித்துள்ளார்.
சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த ரச்சித்தா, பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு போட்டியாளராக உள்ளார்.
3
குரங்குகள்
போஸ்...நண்பர்களுடன்
செம
லூட்டி
அடிக்கும்
பிக்
பாஸ்
ஷெரீன்!

நடிகை ரச்சித்தா
நடிகை ரச்சித்தா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்து, தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார் ரச்சித்தா. இதனால் போட்டியாளர்கள் பலரும் அவர் இயல்பாகவே இல்லை என்றும், பிக் பாஸ் வீட்டில் அவர் சேஃப் கேம் விளையாடி வருவதாகவும் கூறி அவரை அடிக்கடி நாமினேட் செய்து வருகின்றனர்.

கண்டுகொள்ளவில்லை
அதே போல, போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டர் ரச்சித்தா பின்னால் சுற்றிய போதும் அதை கண்டுகொள்ளாமல் விளையாட்டில் கவனம் செலுத்தினார். நார்மலாக இருங்கள் என்று ராபர்ட் மாஸ்டரிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர் கேட்காததால், அவரை அவர் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். ஆனால், வீட்டில் இருப்பவர்கள் ரச்சித்தாவால் தான் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார் என்ற ஒரு குற்றச்சாட்டை தனம் முன்வைத்திருந்தார்.

சரோஜா தேவியாக மாறிய ரச்சித்தா
கடந்த வாரம் கதாபாத்திர டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கில் சீதா தேவி கதாபாத்திரத்தை சிறப்பான செய்திருந்தார். குறிப்பாக ரச்சிதா, மேடையில் நடனமாடும் போது சரோஜா தேவியைப் போலவே அப்படியே பழைய நடன அசைவுகளை போட்டு நடனமாடி இருந்தார். இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களும் பாராட்டினார்கள். கமலஹாசனும் ரச்சித்தாவை வெகுவாக பாராட்டினார்.

பயில்வான் ரங்கநாதன்
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து வரும் சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், ஆதிவாசி மற்றும் ஏலியன்ஸ் டாஸ்க்கை ஒப்பிடும் போது, இந்த கதாபாத்திர டாஸ்க் பரவாயில்லை. இந்த டாஸ்கில் அமுதவாணனின் உடல் மொழி, பேசியவிதம், எம்ஆர் ராதா போல பார்ப்பது என அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது.

படுமோசமான விமர்சனம்
அதேபோல சரோஜ தேவியாக வந்த ரச்சித்தா பேசியது, வெட்கப்பட்டது என அனைத்தும் இயல்பாக இருந்தது. ஆனால் ஒரே ஒரு ட்ராபேக், இது என்னவென்றால், ஆண் போட்டியாளர்கள் யாரையும் அவங்க நடனமாடவில்லை. அசீம் நடனமாடுவதற்கு தயாராக இருந்தார். ஆனால், அதற்கு ரச்சித்தா அனுமதிக்கவில்லை. சீரியலில் தான் ஆண்களோடு சேர்ந்து நடிப்பேன் என்றும், தன்னை ஒரு கற்புக்கரசியாக ரச்சித்தா காட்டிக்கொள்கிறார் என்று படுமோசமாக விமர்சித்தார்.

இதெல்லாம் ஒரு பொழப்பா
பயில்வான் ரங்கநாதனின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அனைவரையும் தரக்குறைவாக பேசுவதே உங்களுக்கு பொழப்பா போச்சு என்றும், பொது இடத்திற்கு வந்து விட்டார்கள் என்பதற்காக வாய்ப்பு வந்ததை பேசாதீர்கள் என்றும், ரச்சித்தாவின் தீவிர ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனை திட்டி வருகின்றனர்.