Don't Miss!
- News
முதல்வர் ஸ்டாலின் மிக நாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.. அவரை பாராட்டுகிறேன்.. கே.எஸ்.அழகிரி பேட்டி!
- Sports
6 பந்தால் தோல்வியை தழுவிய இந்தியா.. தனி ஆளாக போராடிய வாசிங்டன் சுந்தர்.. காலை வாரிய டாப் ஆர்டர்
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
எல்லாரையும் எப்படி சொல்லலாம்.. மேடையிலேயே இயக்குநர் பேரரசை வெளுத்து வாங்கிய பயில்வான் ரங்கநாதன்!
சென்னை: ப்ளூ சட்டை எனும் குறும்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு மற்றும் நடிகர் ஆர்.எஸ். கார்த்திக் உள்ளிட்டோர் காசு கொடுக்காமல் ஓசியில் படம் பார்த்து விட்டு விமர்சகர்கள் விமர்சிக்க வேண்டாம் என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video
அதே மேடையில் சிறப்பு அழைப்பாளராக சென்றிருந்த பயில்வான் ரங்கநாதன் எல்லாரையும் எப்படி அப்படி சொல்லலாம். நானெல்லாம் காலையில் 4 மணிக்கு சொந்த காசில் படத்தை பார்த்து விட்டு விமர்சனம் செய்பவன் என விளாசி தள்ளினார்.
பயில்வான் ரங்கநாதன் ஏகப்பட்ட மேட்டர்களை இறக்க தாங்க முடியாமல் ஜாகுவார் தங்கம் அந்த இடத்தை விட்டே வெளியேறியது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
ஒரே
கல்லில்
ரெண்டு
மாங்கா..நயன்
–
விக்கி
ஜோடியின்
மாஸ்டர்
பிளான்..
அப்போ
ஹனிமூன்
இல்லையா?

ஓசியில் படம் பார்க்குறாங்க
விமர்சகர்கள் பிரஸ் ஷோவில் ஓசியில் படம் பார்த்துட்டு நெகட்டிவ் விமர்சனங்களை சொல்றாங்க என நடிகர் ஆர்.எஸ். கார்த்திக் மற்றும் இயக்குநர் பேரரசு ப்ளூ சட்டை எனும் குறும்பட விழாவில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், அந்த மேடையிலேயே இருவருக்கும் பதிலடி கொடுத்து விட்டார் பயில்வான் ரங்கநாதன்.

பயில்வான் பதிலடி
எல்லோரையும் எப்படி அப்படி சொல்லலாம். நல்ல விமர்சனம் செய்பவர்களும் இங்கு அதிகம் உள்ளனர். நானெல்லாம் படத்தை 4 மணிக்கே பார்த்து விட்டு விமர்சனம் செய்பவன். என் சொந்த காசில் தான் படம் பார்க்கிறேன். நீங்க தேவையில்லாமல் ஏன் நெகட்டிவ் விமர்சனங்களை சொல்றவங்களை மட்டும் தேடிப் போய் பார்த்து விமர்சனத்தால் படமே கெட்டுப் போச்சுன்னு பேசுறீங்க என இயக்குநர் பேரரசை வெளுத்து வாங்கி விட்டார்.

விமர்சனத்தால் பாதிப்பில்லை
ரசிகர்கள் விமர்சனத்தை பார்த்து விட்டுத் தான் தியேட்டருக்கு போகிறான் என்பதும், தியேட்டருக்கு போவதில்லை என்பதும் சுத்த முட்டாள்த்தனம். விமர்சனத்தை ஒரு ஜாலிக்காகத்தான் இளைஞர்கள் பார்க்கின்றனர். படம் நல்லா இருந்தா எல்லாரும் நிச்சயம் தியேட்டருக்குப் போய் பார்த்து விடுகிறார்கள் என்றும் பயில்வான் ரங்கநாதன் பளிச்சென பேசியதில் அங்கிருந்தவர்கள் அப்செட் ஆகிவிட்டனர்.

தப்பா பேசமாட்டேன்
என் யூடியூப் சேனலில் நடிகைகளை பற்றி நான் ஒரு போதும் தப்பா பேசியதில்லை. பேசவும் மாட்டேன் என பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன் தேவயாணி, நதியா பற்றியெல்லாம் என்றைக்காவது நான் தப்பா பேசியிருக்கேனா.. எந்த எந்த நடிகைகள் தப்பா நடக்கிறார்களோ அதைத்தான் சுட்டிக் காட்டி வருகிறேன் என்றும் பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.

காசு கொடுத்து
சமீபத்தில் மதுரைக்கு ஒரு கும்பலை அழைத்துக் கொண்டு போய் தியேட்டரில் இருந்து வெளியே வரும் போது படம் நல்லா இருக்குன்னு சொல்ல காசு கொடுத்து சில ஏற்பாடுகள் நடைபெற்றது. இப்படியெல்லாம் பண்றது சினிமாக்காரங்க தான் என பொசுக்குன்னு உண்மையை போட்டு உடைக்க ஜாகுவார் தங்கம் இவரது பேச்சைஇனியும் கேட்க முடியாது என அந்த இடத்தை விட்டே நடையை கட்டி விட்டார்.