காசு கொடுத்து போயிருக்கேன்னு அவரே சொல்லிருக்கார்... தயாரிப்பாளரை சிக்க வைத்த பயில்வான் ரங்கநாதன்
சென்னை: காமெடி கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்ற பயில்வான் ரங்கநாதன் தற்போது யூடியூப் பிரபலமாக வலம் வருகிறார்.
கட்சிக்காரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பயில்வான் ரங்கநாதனுக்கும் தயாரிப்பாளர் கே ராஜனுக்கும் இடையே மோதல் வெடித்தது.
ஒருவரையொருவர் ஒருமையில் பேசிக் கொண்டதோடு, பயில்வான் ரங்கநாதன் பேசிய சில கருத்துகள் சர்ச்சையாகியுள்ளன.

கட்சிக்காரன் ஆடியோ வெளியீட்டு விழா
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் கட்சிக்காரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே. ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டபோது, இதில் வியர்வையை கூட துடைக்க முடியாதப்பா. இதற்கு பதிலாக காதி கிராஃப்ட்டில் சால்வை வாங்கியிருக்கலாம். இந்தியாவும் இப்போது வல்லரசு ஆகிவிட்டதால் எதற்கெடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டியிருக்கு என பேசியிருந்தார்.

பயில்வானுடன் கே ராஜன் மோதல்
அப்போது ஜிஎஸ்டி குறித்து பயில்வான் ரங்கநாதன் பேச, அவருக்கும் மேடையில் இருந்த கே ராஜனுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஒருகட்டத்தில் இருவருமே ஒருமையில் பேசிக்கொள்ள, பயில்வான் ரங்கநாதனை பார்த்து போடா மாமா பயலே என்றார் கே ராஜன். மேலும், எப்போதும் பெண்களையும் பெட்ரூம் பற்றியுமே பேசும் நீ எச்சப் பயல் என கடுமையாக சாடினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பயில்வான் ரங்கநாதன், கே ராஜன் குறித்து பகிரங்கமாக சில கருத்துகளை முன்வைத்தார்.

அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசியது அவர் தான்
அதில், தயாரிப்பாளர் ராஜன் தான் என்னிடம் வம்பிழுத்தார். நான் தவறாக பேசியிருந்தால் அவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம். அது இல்லாமல் என் பெயரை இழுத்தால், பப்ளிசிட்டி கிடைக்கும் என அவர் அடிக்கடி என்னிடம் பிரச்சினை செய்கிறார். இவர் நடிகைகளின் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசவில்லையா? பெண்களைப் பற்றி பேசியது கிடையாதா? அவரை விடவா நான் மோசமா போய்விட்டேன்? எனக் கூறினார். மேலும், எப்போ பார்த்தாலும் பேசுவதெல்லாம், 'நஷ்டம் நஷ்டம் நஷ்டம்...' தான். ஏன், லவ் டுடே படம் லாபம் இல்லையா? ஜிஎஸ்டி பற்றி அரசியல் பேசுகிறார். ஒருவேளை அந்த படத்திற்கு விருது கொடுக்குறாங்கனு வெச்சுக்கோங்க, இந்தப் பேச்சு விருதுக்கு தடையா இருக்குமா இல்லையா? எனவும் கேள்வி எழுப்பினார்.

காசு கொடுத்து போனவர் தானே அவர்
தொடர்ந்து பேசிய பயில்வான் ரங்கநாதன், எதற்கெடுத்தாலும் "நான் வண்ணாரப்பேட்டை வண்ணாரப்பேட்டை" என்று கூறுகிறார். 'ஏப்பா... நீ வண்ணாரப்பேட்டை என்றால், என் பின்னாடி தமிழ்நாடே நிற்கும்', பாக்குறீயா! என சவால் விட்டார் பயில்வான். மேலும், டிவி, யூடியூப்பில் அவருடன் விவாதிக்க சம்மதமா என்று என்னை அழைத்தார்கள். நான் ரெடி, அவரை வரச்சொல்லுங்க. நான் இல்லாத போது என்னை பற்றி பேசுவது; நான் வருவதாக இருந்தால் அங்கிருந்து வெளிநடப்பு செய்வது என இருக்கிறார். நான் உன் குடும்பத்தை கெடுத்தேனா, இல்லை, உன் குடும்பத்தோடு நீ வாழாமல் இருக்க நான் காரணமாக இருந்தேனா? எனவும் காட்டமாக பேசினார். அதேபோல், அந்த ஆளு தான், நானும் பெண்களிடம் உறவாடியிருக்கிறேன், ஆனால், அதற்கு பணம் கொடுத்திருக்கிறேன் என்று அவரே யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் எனவும் பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார்.

பப்ளிசிட்டிக்காக சண்டை செய்கிறார்
மேலும், "நான் யூடியூப்பில் பேசுகிறேன் என்றால், லட்சக்கணக்கானோர் பாக்குறாங்க, ரசிக்கிறாங்க. இத்தனைக்கும் நான் சொந்த யூடியூப் நடத்தவே இல்லை. வேண்டுமென்றே அவரது பப்ளிசிட்டிக்கு என்னை இழுத்தால் நான் சும்மா விடுவேனா? கட்சிக்காரன் படத்திற்கு ஜிஎஸ்டி.,க்கும் என்ன சம்மந்தம். மேடை நாகரீகத்தை எப்போது கடைபிடித்தான் அந்த ஆளு. நான் இல்லாத போது பேசுகிறார், நான் இப்போ வந்திருக்கிறேன் இப்போ பேசு என முன்னாடி வந்து நின்றேன் அதுதான் நடந்தது. நான் ஆதித்தனாரால் வளர்க்கப்பட்டவன். 45 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர், சோமன் பாபு வரை எல்லாரிடமும் இருந்திருக்கிறேன். அதனால் எனக்கு எந்த பயமும் இல்லை" எனக் கூறினார். பயில்வான் ரங்கநாதனின் இந்தப் பேட்டி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











