kuttram pudhithu Review: ’குற்றம் புதிது’ படம் எப்படி இருக்கு.. பயில்வான் ரங்கநாதனின் விமர்சனம்!
சென்னை: இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் இயக்கி இருக்கும் திரைப்படம் குற்றம் புதிது. இப்படத்தில் ருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, மதுசூதன் ராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரைராஜ், பாய்ஸ் ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இசை கரண் பி கிருபா, தருண் விஜய் இந்த படத்தை தயாரித்துள்ளார். அட்டகாசமான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படம் குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
காவல்துறை உதவி ஆணையர் மதுசூதனன் ராவின் மகளான நாயகி சேஷ்விதா கனிமொழி, பணி முடித்துவிட்டு வீடு திரும்பும் போது திடீரென்று காணாமல் போய்விடுகிறார். ஆட்டோவில் வருவதாக தகவல் தெரிவித்த மகள் வீடு திரும்பாததால் கவலை அடைகிறார். மறுநாள் காலை மதுசூதனன் ராவுக்கு ஆட்டோ ஓட்டுநரிடம் இருந்த போன் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் வருகிறது. இதனால், காவல்துறையினரின் சந்தேகம் ஆட்டோ ஓட்டுநர் மீது திரும்புகிறது. இந்த நேரத்தில் படத்தின் ஹீரோவான தருண் விஜய் போலீசில் சரணடைந்து ஒருவரை கொலையை செய்துவிட்டதாக சொல்கிறார்.
குற்றம் புதிது: இதனால், அதிர்ந்து போன போலீசார் அவரிடம் விசாரணை நடத்துகின்றனர். தருண் விஜய் பார்ப்பதற்கு மன நலம் பாதிக்கப்பட்டது போல இருப்பதால், போலீசாருக்கு அவர் மீது ஏதோ சந்தேகம் வர,சேஷ்விதா கனிமொழி போட்டோவை காட்ட, இந்த பெண்ணை நான் தான் கொன்றேன்அதுவும் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தேன் என சொல்கிறார். இந்தப் பெண் மட்டுமல்லாமல் என்னும் இரண்டு பேரை கொலை செய்ததாக தருண் விஜய் கூறியதை தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றனர்.

படத்தின் கதை: ஆனால், நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கேட்கும் கேள்விக்கு ஏடாகூடமாக பதில் செல்கிறார் தருண் விஜய். அதுமட்டுமில்லாமல் நீதிபதியை 'அங்கிள்' என அடைந்ததால் இவன் உண்மையிலேயே கொலை செய்தானா.. இல்ல மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா.. என்று மீண்டும் விசாரணை நடத்துமடி நீதிபதி உத்தரவிடுகிறார். இது தொடர்ந்து போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கும் போது தான், தருண் விஜய் கொலை செய்ததாக கூறப்படும் இரண்டு பேரும் உயிருடன் இருப்பதை போலீசார் கண்டுபிடிக்கின்றனர். உயிருடன் இருப்பவர்களை கொன்று விட்டதாக ஏன் தருண் விஜய் சொல்ல வேண்டும்... உண்மையில் தருண் விஜய் யார் ? சேஷ்விதா கனிமொழி என்ன ஆனாது என பல கேள்விகளுடன் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் 'குற்றம் புதிது' படத்தின் கதை செல்கிறது.
சிறப்பான நடிப்பு: பல இடத்தில் சஸ்பென்சர் வைத்து கதையை சிறப்பாக நகர்த்தி சென்று இருக்கிறார் இயக்குநர். அதேபோல இந்த திரைப்படத்தின் கதாநாயகன் தருண் விஜய்க்கு இதுதான் முதல் படம் அப்படி இருந்தும் முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்து அசத்தி இருக்கிறார். முதல் படத்திலேயே கேமிரா பயமே இல்லாமல், 25 படத்தில் நடித்த நடிகர் அட்டகாசமாக நடித்து பட்டையை கிளப்பி இருக்கிறார் தருண் விஜய். அதே போல படத்தின் நாயகி சேஷ்விதா கனிமொழி நன்றாக நடித்து இருக்கிறார். படத்தின் பெயர் குற்றம் புதிது என்பது மட்டுமில்லை கதை புதிது. இந்த படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள் நிச்சயம் பிடிக்கும், இந்த படத்திற்கு பயில்வான் ரங்கநாதன் கொடுக்கும் மதிப்பேண் 100க்கு 69 என்று அந்த விமர்சன வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











