BB-6..ஒரு டீ குடிக்க இத்தனை பிரச்சினையா அசீம்?..முதல் நாளே எடுத்தெரிஞ்சு பேசுவதால் டீம் மேட்ஸ் கோபம்

பிக்பாஸ் வீட்டுக்குள் அதிக அளப்பறை செய்வதில் அசீம் முதலிடத்தில் இருக்கிறார்.

தேவையில்லாமல் அடுத்தவர் விஷயங்களில் தலையிட்டு பஞ்சாயத்து செய்வதால் அவரை நெட்டிசன்கள் வறுத்தேடுக்கின்றனர்.

முந்திக்கொண்டு கருத்து கந்தசாமி போல் கருத்து சொல்வதால் டீமுக்குள் அவர் மீது கோபம் கொஞ்சம் கொஞ்சமாக கிளம்பியுள்ளது.

பிக்பாஸ் போட்டியாளர்களின் சுயரூபம் எப்போது வெளிப்படும்

பிக்பாஸ் போட்டியாளர்களின் சுயரூபம் எப்போது வெளிப்படும்

பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்துள்ளது. இதில் இன்று இரண்டாம் நாள் நடக்கிறது. பிக்பாஸ் சீசனுக்கு சீசன் விதவிதமான மன நிலையில் உள்ளவர்கள் வருவார்கள். ஆனால் அவர்களது இயல்பு நிலை வெளிப்பட நாளாகும். முதலில் நட்பாக பழக ஆரம்பித்து பின்னர் அவர்கள் சுயரூபம் வெளிப்படும்.

அட ஜி.பி.முத்து இப்படி சாஃப்ட்டா இருக்காரே

அட ஜி.பி.முத்து இப்படி சாஃப்ட்டா இருக்காரே

இதில் இந்த சீசனில் பெரிய கோபக்காரராக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ஜி.பி.முத்து அமைதியானவராக அட்ஜஸ்ட் பண்ணுபவராக இருக்கிறார். ஆனால் பிக்பாஸ் சீசனில் போனதடவை எரிச்சல் மூட்டிய அபிஷேக் ராஜா போல் முதல் நாளிலிருந்தே ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தார் அசீம். இது அவருக்கு ஆபத்தாக முடியப்போகிறது என்பதை அவர் அறியவில்லை.

முந்திரிக்கொட்டையாக மாறி சிக்கும் அசீம்

முந்திரிக்கொட்டையாக மாறி சிக்கும் அசீம்

எல்லா விவகாரத்திலும் முந்திக்கொண்டு கருத்து சொல்வது, மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடுவது, என ஆரம்பித்தவர் பிக்பாஸ் வீட்டில் உள்ள கிச்சன் டீமிடம் வம்பிழுத்தார். ரேஷன் பொருட்கள் குறைவாக உள்ள நிலையில் எனக்கு பால் டீ வேண்டும் என்று கேட்க கிச்சன் டீம் மகேஷ்வரி மொத்தமாக அனைவருக்கும் கொடுக்க போகிறோம் சேர்த்து தருகிறோம் என்று சொல்ல அதெல்லாம் முடியாது என்று சண்டையை ஆரம்பித்தார்.

தேவையற்ற வீண் விவாதம்

தேவையற்ற வீண் விவாதம்

அதன்பின்னர் மகேஸ்வரிக்கும் அசீமுக்கும் வாக்குவாதம் ஆரம்பிக்க இடையில் புகுந்து சாந்தி சமாதானப்படுத்தினாலும் எனக்கு நான் கேட்கிறேன், நீங்கள் யார் ஆர்டர் போட பிக்பாஸா என அசீம் எகிற நான் பிக்பாஸ் இல்லங்க அனைவரும் டாஸ்க்ல இருக்கிறோம் என்று மகேஸ்வரி சொல்ல நெடுநேரம் வாக்குவாதம் போனது.

மகேஸ்வரியிடம் சமாதானம் பேசிய அசீம்

மகேஸ்வரியிடம் சமாதானம் பேசிய அசீம்

அதன்பின் அசீம் மகேஸ்வரியிடம் தான் ஏன் வாதம் செய்தேன் என்று சொல்லி சமாதானப்படுத்தினார். ஆனாலும் மகேஸ்வரி திருப்தி அடையவில்லை என்றே தெரிந்தது. ஆனால் ராமிடம் மகேஸ்வரி அசீம் பற்றி குறைச் சொல்லி வருத்தப்பட்டார். தான் பேசுவதை அவர் காது கொடுத்து கேட்கவே இல்லை என்று வருத்தப்பட்டார்.

சிரிக்க சிரிக்க பேசுவார்கள், நாமினேஷனில் வைப்பார்கள் ஆப்பு

சிரிக்க சிரிக்க பேசுவார்கள், நாமினேஷனில் வைப்பார்கள் ஆப்பு

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு எப்போதும் ஒரு குணம் இருக்கும். எதிரில் சிரிக்க சிரிக்க பேசுவார்கள். ஆனால் கன்ஃபஷன் ரூமில் எவிக்‌ஷன் நேரத்தில் இதையே காரணமாக சொல்லி நாமினேட் செய்வார்கள். இதை அறியாத ஆர்வக்கோளாறு அசீம் போன்றோர் சிக்கி வெளியேற்றப்படுவர். அது போகப்போக அசீமுக்கு புரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X