For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கண்டபடி பேசும் போட்டியாளர்கள்.. கமல் இதையெல்லாம் இன்று கேட்பாரா?

  |

  பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளர்கள் பேசும் வார்த்தைகள் திருத்தும் அளவுக்கு உள்ளது.

  உருவக்கேலி, ஊனத்தைச் சொல்வது, அவதூறாக பேசுவது, பெண்களிடம் முரட்டுத்தனமாக பேசுவது போன்றவை நடக்கிறது.

  ஒவ்வொரு சீசனிலும் இதுபோன்ற விஷயங்களை கண்டிக்கும் கமல்ஹாசன் இன்று கண்டிப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

  கல்யாணம் குறித்த பிக்பாஸ் ஜனனியின் வேற லெவல் திட்டம்.. என்ன சொன்னாங்க தெரியுமா? கல்யாணம் குறித்த பிக்பாஸ் ஜனனியின் வேற லெவல் திட்டம்.. என்ன சொன்னாங்க தெரியுமா?

   உருவக்கேலி செய்யும் போட்டியாளர்கள்

  உருவக்கேலி செய்யும் போட்டியாளர்கள்

  முக்கியமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே வார்த்தை பிரயோகம் தவறுதலாக போய்க் கொண்டிருப்பதை பார்க்கிறோம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சிலர் அவர்கள் பங்கேற்ற டிவி நிகழ்ச்சிகளில் உருவக்கேலி அதிகம் இருக்கும் அது போன்று மன நிலையில் பிக்பாஸை அணுக முடியாது. இந்த நிகழ்ச்சியிலும் ஆரம்பத்தில் அமுதவாணன் ஜி.பி.முத்துவை உயரம் குறித்து பேசி உருவக்கேலி செய்தார். வேறு ஒரு நிகழ்ச்சியில் உறுப்பினர்களிடையே நடந்த சண்டையில் அசீம் பெண் போட்டியாளரான மகேஸ்வரிடம் கடுமையான வார்த்தை மோதலில் ஈடுபட்டார்.

   பெண் போட்டியாளர்களிடம் கடுமை காட்டும் அசீம்

  பெண் போட்டியாளர்களிடம் கடுமை காட்டும் அசீம்

  "உங்களைப் பற்றி வெளியில போய் பாருங்க வாந்தி எடுக்குறாங்க அதுக்கும் மேல பண்றாங்க" என்றெல்லாம் மோசமான வார்த்தைகளால் அர்ச்சித்தார். அதற்கு பின்னர் கதிரவன் அவரை சமாதானப்படுத்திய பொழுது மச்சான் நான் இதைவிட வேற லெவல்ல இறங்கி பேசுவேன் என்று பேசினார். இதற்கு முன்னரும் இவர் இதே போன்ற நடைமுறையில் பெண் போட்டியாளர்களிடம் முரட்டுத்தனமாக நடந்ததை காண முடிந்தது. இதேபோல் லூசு, பைத்தியம் போன்ற வார்த்தைகளை வெகு சாதாரணமாக போட்டியாளர்கள் பயன்படுத்துகின்றனர். ஊனத்தை சொல்லி கிண்டல் செய்வது போன்ற சில வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் என்பது விதி. ஆனால் சாதாரணமாக இது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.

   லூசு, பைத்தியம் போன்ற வார்த்தைகள்

  லூசு, பைத்தியம் போன்ற வார்த்தைகள்

  குறிப்பாக தனலட்சுமி தன் வயதை மீறி தன்னுடைய தந்தை வயது உள்ள ஜி.பி.முத்துவை பற்றி பேசும்பொழுது அவர் ஒரு லூசு என்று பேசியது பரபரப்பாகி வருகிறது. இது போன்ற வார்த்தை பிரயோகம் பிக்பாஸ் தவிர்க்க சொல்லி குறிப்பிடாததும் கவனிக்கத்தக்கது. இதேபோன்று ரிவ்யூ மீட்டிங் ஸ்வாப் செய்யும் பொழுது தன்னுடைய வாதத்தை எடுத்து வைத்த கிளப் ஹவுஸ் ஓனர் ஜனனி தனலட்சுமிக்கு அறிவுரை கூறுவதாக நினைத்துக் கொண்டு வயது வித்தியாசம் இல்லாமல் நடக்க இது ஒன்றும் ரீல்ஸ் அல்ல என்று வார்த்தையை விட்டார். பிறகு அது குறித்து விக்ரமன் ஆயிஷா உள்ளிட்டவர்கள் கேட்ட பொழுது சமாளிக்க தெரியாமல் திணறினார்.

   நல்ல வார்த்தைகள் எது? கமல்ஹாசன் குறிப்பிடுவாரா?

  நல்ல வார்த்தைகள் எது? கமல்ஹாசன் குறிப்பிடுவாரா?

  ரீல்ஸ் செய்பவர்கள் எல்லாம் மட்டமா என்கிற கேள்வி வைக்கப்பட்டபோது அவர் தரப்பில் சரியான பதிலை சொல்ல முடியவில்லை அவர் திணறியது தெரிந்தது. இன்றைய பிக் பாஸ் கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்வார், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு முதல் கூட்டம் என்பதால் இந்த கூட்டம் கடுமையாக இருக்காது. ஆனால் கமல்ஹாசன் தவறான நடத்தைகள் நடைமுறைகளை பற்றி குறிப்பிடுவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. சமூகத்தில் பயன்படுத்த வேண்டிய வார்த்தைகள் எவைகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து கமல்ஹாசன் ஒவ்வொரு சீசனிலும் வலியுறுத்தி வந்துள்ளார். அந்த வகையில் இந்த சீசனிலும் அதை குறிப்பிடுவார் என்று எதிர்பார்ப்போம்.

  English summary
  Bigg Boss Season 6 has a lot to do with the contestants' spoken controversial words. Profanity, insults, slurs, and rudeness to women happen. Will Kamal Haasan, who condemns such things every season, condemn it today? The question has arisen.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X