»   »  ஒரேயொரு வார்த்தையால் ஜூலியை அசிங்கப்படுத்திய கமல்: ஆண்டவர்னா சும்மாவா!

ஒரேயொரு வார்த்தையால் ஜூலியை அசிங்கப்படுத்திய கமல்: ஆண்டவர்னா சும்மாவா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலியை நாரதர் என்று கூறி பின்னர் தன்னை பற்றி சொன்னதாக கமல் ஹாஸன் தெரிவித்தார்.

பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்துள்ள ஜூலியை யாருக்கும் பிடிக்கவில்லை. இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் தனக்கே உரிய ஸ்டைலில் ஜூலியை அசிங்கப்படுத்திவிட்டார்.

நேற்று காஜல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டை

சண்டை

உங்களுக்கு கொஞ்சம் சண்டை இல்லை என்றால் போர் அடிக்குதுல்ல என்று கமல் பார்வையாளர்களை சொல்வது போன்று சுஜா வருணியை குத்திக் காட்டி பேசினார்.

ஜூலி

ஜூலி

ஆரவ், சினேகன், காஜல் ஆகியோரில் யாரை வெளியேற்றினால் மிஸ் பண்ணுவீர்கள் என்று கமல் ஜூலியிடம் கேட்டார். ஜூலியோ மூன்று பேரையும் சரி சமமாக பிடித்துள்ளது. அதனால் யார் போனாலும் மிஸ் பண்ணுவேன் சார் என்று கூறினார்.

நாரதர்

நாரதர்

ஜூலியின் பதிலை கேட்ட கமலோ, சரி நாரதர் வேலை பார்த்தது போதும் என்றார். இதை கேட்ட ஜூலியின் முகம் மாறிவிட்டது. உடனே கமல், உங்களை சொல்லவில்லை என்னை சொன்னேன் என்று மழுப்பினார்.

பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்

நாரதர் என்று என்னை சொன்னேன் என்று கமல் மீண்டும் மீண்டும் கூறினார். ஆனால் அவர் யாரை குறிப்பிட்டார் என்பதை புரிந்து கொண்ட பார்வையாளர்கள் விசில் அடித்து கைதட்டினர்.

English summary
Kamal Haasan has pointed out Julie's mistake in his own unique way which was applauded by the audience in the Big Boss programme.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil