விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு குவைத்தில் தடை...என்ன காரணம் தெரியுமா?

சென்னை : விஜய் நடித்த பீஸ்ட் படத்தை குவைத்தில் ரிலீஸ் செய்ய அந்நாட்டு தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. தடைக்காக சொல்லப்படும் காரணம் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விஜய் நடித்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டிரைலர் யூட்யூப்பில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டு, சாதனை படைத்துள்ளது. உலக அளவில் தொடர்ந்து டிரெண்டிங் ஆகி உள்ளது.

டிவியில் விஜய் பேட்டி

டிவியில் விஜய் பேட்டி

பீஸ்ட் டிரைலர் ரிலீசை தொடர்ந்து ப்ரோமோஷன் பணிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ப்ரோமோஷனுக்காக 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய், டிவியில் தோன்றி பேட்டி அளிக்க உள்ளார். டைரக்டர் நெல்சன் திலீப்குமார் தான் விஜய்யை பேட்டி எடுக்க உள்ளார். அவர் கேட்கும் விவகாரமான கேள்விகளுக்கு விஜய் ஜாலியாக பதில் சொல்லும் பேட்டி ஏப்ரல் 10 ம் தேதி இரவு 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

குவைத்தில் பீஸ்ட்டுக்கு தடை

குவைத்தில் பீஸ்ட்டுக்கு தடை

பீஸ்ட் ரிலீசை திருவிழாவாக கொண்டாட விஜய் ரசிகர்கள் ஏற்பாடு செய்து வரும் நிலையில், குவைத் அரசு பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அல்லது வன்முறையை சித்தரிக்கும் விதமாக படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது தான் தடைக்கு காரணம் என சொல்லப்படுகிதாம். இதனால் படக்குழுவும், விஜய் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட படங்கள்

தடை செய்யப்பட்ட படங்கள்

இதற்கு முன் சமீபத்தில் விஷ்ணு விஷால் நடித்த எஃப்ஐஆர், ,கிரூப் ஆகிய இந்திய படங்களுக்கும் குவைத்தில் தடை விதிக்கப்பட்டது. வன்முறையை தூண்டும் வகையிலான காட்சிகள் அடங்கிய படங்களை திரையிடக் கூடாது என்ற விதியை சமீப காலமாக குவைத் சென்சார் மிக தீவிரமாக பின்பற்றி வருவது தான் சமீபத்திய இந்திய திரைப்படங்களுக்கு அரபு நாடுகளில் அடுத்தடுத்து தடை விதிக்க காரணமாம்.

பீஸ்ட் வசூலை பாதிக்குமா

பீஸ்ட் வசூலை பாதிக்குமா

குவைத் அரசு பீஸ்ட் படத்திற்கு தடை விதித்ததற்கு சொல்லி உள்ள காரணத்தால் மற்ற நாடுகளிலும் இது போன்ற தடை வருமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது படத்தின் வசூலை பாதிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் அரபு நாடுகளில் வெறும் 5 சதவீதம் மட்டும் வசூல் கிடைப்பதால், இதனால் பீஸ்ட் படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிக்கப்படாது என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X