Don't Miss!
- Sports
45 பந்துகளாக பவுண்டரிகள் இல்லை.. டெஸ்ட் மேட்ச் போல் டி20 ஆடிய இந்தியா..கடைசி ஓவரில் திரில் வெற்றி
- News
ஒடிசா அமைச்சர் நபா தாஸ் மறைவால் வேதனை.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
- Finance
அதானி குழும பங்குகள் வரும் நாட்களிலும் சரியுமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க பாருங்க?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பீஸ்ட் அப்டேட் கேட்ட ரசிகர்கள்.. ஆடை பட இயக்குநரின் அடுத்த பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட நெல்சன்!
சென்னை: ஆடை பட இயக்குநர் சந்தானத்தை வைத்து புதிய படம் இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த படத்தின் அட்டகாசமான மோஷன் போஸ்டர் டீசரே வெளியாகி உள்ளது.
விஜய் ரசிகர்கள் இன்று காலை முதலே பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் வரும் என்றும் அட்லீஸ்ட் மோஷன் போஸ்டராவது வரும் என்றும் ரொம்பவே வெறித்தனமாக காத்திருந்தனர்.
இந்நிலையில், சந்தானம் படத்தின் அப்டேட் வெளியானதும், கடுப்பில் இயக்குநர் நெல்சனை கண்டபடி திட்டி வருகின்றனர்.
ஆடை பட இயக்குநருடன் இணையும் சந்தானம்... விரைவில் அறிவிப்பு

ஆடை பட இயக்குநர்
மேயாத மான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்ன குமார். அமலா பாலை முழு நிர்வாண கோலத்தில் நடிக்க வைத்து இவர் இயக்கிய ஆடை திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆடை படத்திற்கு பிறகு விஜய்யின் மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய ரத்ன குமார் தற்போது சந்தானத்தை வைத்து புதிய படத்தை இயக்கி உள்ளார்.
குலு குலு
மோஷன் போஸ்டர் என சொல்லிவிட்டு ஒரு குட்டி அனிமேஷன் டீசரையே வெளியிட்டுள்ளனர். இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம், அதுல்யா சந்திரா (அதுல்யா ரவி இல்லை). நமீதா கிருஷ்ணமூர்த்தி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு குலு குலு என டைட்டில் வைத்துள்ளனர் அதற்கான விளக்கத்தையும் இந்த மோஷன் போஸ்டரிலேயே இயக்குநர் வாய்ஸ் ஓவரில் கொடுத்திருக்கிறார். பாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் சந்தானத்துக்காக ஸ்பெஷல் பாடல்களை போட சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளார்.

வித்தியாசமா இருக்கு
மேயாத மான், ஆடை என இரு வித்தியாசமான படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் சந்தானம் படம் நிச்சயம் வித்தியாசமான திரைக்கதையுடன் இருக்கும் என்பது இந்த மோஷன் போஸ்டரை பார்த்தாலே தெரியும், பல உலக நாடுகளுக்கு சுற்றுலா செய்து, 13 மொழிகளில் கற்று இருக்கும் நபராக சந்தானம் இந்த படத்தில் நடித்துள்ளார். லுக் கூட வித்தியாசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நெல்சன், லோகேஷ் கனகராஜ்
சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் மோஷன் போஸ்டர்களையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் வெளியிட அதிக சம்பளம் கேட்பதால், இயக்குநர்கள் குறைவான தொகைக்கு இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட ஆரம்பித்து விட்டார்கள் போல, இயக்குநர் நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

பீஸ்ட் அப்டேட் எங்கே
இயக்குநர் நெல்சன் ட்வீட் நோடிபிகேஷன் வந்ததும் ட்விட்டரில் ஆஜரான விஜய் ரசிகர்கள் ஆடை பட இயக்குநரின் குலு குலு பட மோஷன் போஸ்டர் அப்டேட்டை பார்த்ததும் கொல காண்டாகி உள்ளனர். பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் அல்லது மோஷன் போஸ்டரை எதிர்பார்த்து காத்திருந்தவர்களை இப்படி ஏமாற்றி விட்டீர்களே நெல்சன் என கண்டபடி திட்டி வருகின்றனர்.
-
நாங்க ரூல்ஸ் பிரேக் பண்றவங்க.. வனிதா தோளில் கை போட்டு போஸ் கொடுத்த அசீம்.. கலாய்க்கும் ரசிகர்கள்!
-
நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா? தனுஷிற்கு கிடைத்த மற்றுமொரு கௌரவம்!
-
ஒன்லி ஃபார் அடல்ட்ஸ்.. நெட்பிளிக்ஸின் டாப் 5 லேட்டஸ்ட் ஹாட் வெப்சீரிஸ்.. எல்லாமே எக்ஸ்ட்ரா தான்!