சூப்பர்ஸ்டாருடன் அடுத்த படத்தில் இணைகிறாரா பீஸ்ட் இயக்குநர்? இணையதளத்தில் வைரலாகும் தகவல்

சென்னை : டாக்டர் படத்தின் வெற்றியை அடுத்து தற்போது நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார்.

படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்த நிலையில் இந்தப் படம் வரும் 2022 ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு பிறகு அடுத்தப் படத்திலும் சிறப்பான கூட்டணியில் நெல்சன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா என்ற படத்தின் வெற்றியை அடுத்து பரவலாக அறியப்பட்டவர். இந்தப் படத்திற்காக சிறப்பான திரைக்கதை விருதை நார்வே தமிழ் பிலிம் பெஸ்டிவலில் பெற்றுள்ளார். தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கி அந்தப் படத்தையும் வெற்றிப் படமாக்கியுள்ளார்.

டாக்டர் படத்தின் வெற்றி

டாக்டர் படத்தின் வெற்றி

டாக்டர் படத்தில் மனித கடத்தலை மையமாக வைத்து இயக்கினார். ஆயினும் அந்தப் படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இந்தப் படத்தின் திரைக்கதையும் பரவலாக பாராட்டுக்களை பெற்றது. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் வெற்றியை சிவகார்த்திகேயனுக்கு பெற்றுத் தந்துள்ளது.

எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள பீஸ்ட்

எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள பீஸ்ட்

விஜய் படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களால் மிகுந்த பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது. அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். முதல் இரண்டு படங்களின் வெற்றி இவருக்கு இதை சாத்தியப்படுத்தியுள்ளது.

கோடை கொண்டாட்டம்

கோடை கொண்டாட்டம்

விஜய் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில், படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

சூப்பர்ஸ்டாரை இயக்கும் நெல்சன்?

சூப்பர்ஸ்டாரை இயக்கும் நெல்சன்?

இதனிடையே அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாகவும் அதை சன் பிகசர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தீபாவளியையொட்டி வெளியான ரஜினியின் அண்ணாத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களையும் சிறப்பான வெற்றியையும் பெற்றுள்ளது.

சூப்பர்ஸ்டார் -நெல்சன் -சன் பிக்சர்ஸ் கூட்டணி?

சூப்பர்ஸ்டார் -நெல்சன் -சன் பிக்சர்ஸ் கூட்டணி?

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும், தற்போது சன் பிக்சர்சுக்காக விஜய் படத்தை இயக்கிவரும் நெல்சன் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் நிலையில், விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X