திடீரென டிரெண்டிங் ஆன பீஸ்ட்...காரணம் என்னன்னு தெரியுமா ?
சென்னை : இன்று காலை முதலே ட்விட்டரில் #Beast ஹேஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் தொடர்ந்து டாப்பில் இருந்து வருகிறது. எதற்காக இப்போது திடீரென பீஸ்ட் டிரெண்டிங் ஆகிறது என புரியாமல் குழம்பிப் போய் உள்ளனர்.
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13ம் தேதி 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் பீஸ்ட் படமும் ஒன்று. அஜித்தின் வலிமை படத்திற்கு பிறகு ரசிகர்களால் அதிக முறை அப்டேட் கேட்கப்பட்ட படமும் இது தான்.

விமர்சனங்களை தாண்டிய வசூல்
ஆனால் இந்த படம் அனைவருக்கும் ஏமாற்றத்தையே தந்தது. கலவையான விமர்சனங்களையே பெற்றது. நெல்சன் தான் திரைக்கதையை சொதப்பி விட்டார் என சிலரும், அடுத்த நாளே கேஜிஎஃப் 2 ரிலீசானதும் தான் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என சிலரும் கூறினர். இருந்தாலும் பீஸ்ட் படம் 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. தியேட்டரை தொடர்ந்து சமீபத்தில் ஓடிடியிலும் பீஸ்ட் ரிலீஸ் செய்யப்பட்டது.

பீஸ்ட்டை கலாய்த்த விமானிகள்
இந்நிலையில் இந்திய விமானப்படையின் ஓய்வுபெற்ற விமானிகள் சிலர் ட்விட்டரில், பீஸ்ட் படத்தின் க்ளைமாக்சில் விஜய் போர் விமானம் ஓட்டிச் செல்லும் சீனை கலாய்த்து கருத்து பதிவிட்டிருந்ததாக ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதே சமயம் இதே சீனை பாராட்டியும் சில விமானிகள் ட்விட்டரில் கமெண்ட் செய்திருந்தனர்.

கடுப்பான விஜய் ரசிகர்கள்
என்ன தான் சினிமா என்றாலும் ஒரு லாஜிக் வேண்டாமா என கேட்டிருந்தனர். போர் விமானத்தில் மில்டன் பாட்டில் எப்படி வந்தது என கேட்டு கலாய்த்தனர். இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #Beast ஹேஷ்டேக்கை டேக் செய்து, டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். பல பாலிவுட் படங்களின் ஸ்டில்களை எடுத்து, இதில் மட்டும் லாஜிக் இருக்கிறதா என கேட்டு வருகின்றனர்.

ட்விட்டரில் தெறிக்கும் மோதல்
இதனால் ட்விட்டரில் பாலிவுட் - கோலிவுட் என பயங்கர மோதல் நடந்து வருகிறது. பல டாப் ஹீரோக்களின் பாலிவுட் படங்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து விஜய் ரசிகர்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். சிலர் மிக கோபமாகவும் திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











