பீஸ்ட் செம ஹாட் அப்டேட்...விஜய்யுடன் இணைந்து நடித்த டாப் ஹீரோ யார் தெரியுமா ?

சென்னை : விஜய்யின் 65 வது படமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ ஒருவர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளாராம். அந்த டாப் ஹீரோ யார் என்ற விபரம் தற்போது கசிந்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள பீஸ்ட் படத்தின் ஷுட்டிங்கை விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் சமீபத்தில் நிறைவு செய்தனர். விரைவில் படத்தின் டப்பிங், பாடல் ரெக்கார்டிங், ப்ரொமோஷன் உள்ளிட்ட வேலைகள் துவங்கப்பட உள்ளது.

 2022 கோடை ரிலீஸ்

2022 கோடை ரிலீஸ்

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் படத்தில் அபர்னா தாஸ், யோகி பாபு, செல்வராகவன், ஷைன் டாம் சாகோ, விடிவி கணேஷ், சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் 2022 ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியிடப்பட உள்ளது.

 ஃபஸ்ட் சிங்கிள் எப்போ

ஃபஸ்ட் சிங்கிள் எப்போ

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் புத்தாண்டு ஸ்பெஷலாக டிசம்பர் 31 ம் தேதியன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஃபஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியிடப்பட உள்ளது.

ப்ரோமோ ஷுட்டிங்

ப்ரோமோ ஷுட்டிங்

பீஸ்ட் படத்திற்காக சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் தான் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்த பாடலை விஜய்யே தனது சொந்த குரலில் பாடி உள்ளார். இந்த பாடல் ப்ரோமோவிற்காக ஸ்பெஷல் வீடியோ ஷுட்டிங் சமீபத்தில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த டாப் ஹீரோ நடித்துள்ளாரா

இந்த டாப் ஹீரோ நடித்துள்ளாரா

லேட்டஸ்ட் தகவலாக இந்த ப்ரோமோ வீடியோ, டாக்டர் பட ஃபஸ்ட் சிங்கிள் ப்ரோமோவை போன்றே உருவாக்கப்பட்டுள்ளதாம். விஜய், அனிருத், நெல்சன் திலீப்குமார் ஆகியோருடன் சிவகார்த்திகேயனும் இந்த வீடியோவில் நடித்துள்ளாராம். செம காமெடியாக இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாம்.

ரசிகர்களை கவர்ந்த ப்ரோமோ

ரசிகர்களை கவர்ந்த ப்ரோமோ

இதற்கு முன் டாக்டர் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான செல்லம்மா செல்லம்மா பாடலின் ப்ரொமோ வீடியோவிலும் சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலீப்குமார் இருவரும் அனிருத்தை சந்தித்து ஒரு பாடல் வேண்டும் என கேட்பது போல் காமெடியாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X