பீஸ்ட் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போ...வெளியான சூப்பர் தகவல்

சென்னை : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்திற்கு பீஸ்ட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி உள்ளன. இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக பீஸ்ட் இருந்து வருகிறது.

பீஸ்ட் ரிலீஸ் எப்போ

பீஸ்ட் ரிலீஸ் எப்போ

இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பீஸ்ட் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

விறுவிறுப்பான படப்பிடிப்பு

கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் சமீபத்தில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் துவங்கப்பட்டது. முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதன் ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்கள் வெளியாகி வைரலாகின.

இறுதிக்கட்டத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு

இறுதிக்கட்டத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு

இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் விஜய், பூஜா ஹெக்டே பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறதாம்.

அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போ

அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போ

லேட்டஸ்ட் தகவலாக, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளதாம். இதனால் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 1 ம் தேதி துவங்கப்பட உள்ளதாம். இந்த படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்ள உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X