‘பீஸ்ட்‘ பின்னணி இசை ரிலீஸ்.. விஜய் பிறந்த நாளுக்கு அனிருத் அளித்த பரிசு!
சென்னை : தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு பீஸ்ட் திரைப்படத்தின் பின்னணி இசையை அனிருத் வெளியிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய் கடைசியாக நடித்த படம் பீஸ்ட்.
இந்த படம் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. மற்ற படங்களுக்கு இல்லாத அளவில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு இருந்தது.

நெல்சன்
சிம்புவின் வேட்டை மன்னன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். கடந்த 2010-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த நெல்சனுக்கு அனிருத் மூலம் நயன்தாராவுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

கோலமாவு கோகிலா
பல வருட காத்திருப்புக்கு பின் கிடைத்த அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்ட நெல்சன், கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தார். போதை பொருள் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தது.

பீஸ்ட் கடும் விமர்சனம்
கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, பீஸ்ட் திரைப்படமும் மகத்தான வெற்றியை பெரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரிலேயே பீஸ்ட்டின் மொத்த கதையும் தெரிந்துவிட்டதால், இது என்ன யோகிபாபு நடித்த கூர்கா திரைப்படம் போல இருக்கு என்று கிண்டலடிக்கத் தொடங்கினர்.

ரசிகர்கள் ஏமாற்றம்
ஆனால், நெல்சனோ, , இது கூர்கா திரைப்படம் இல்லை, இப்படத்தின் கதையை வேறு என பேட்டியின் போது கூறியிருந்தார். இதனால் பீஸ்ட் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து இருந்தனர். இதையடுத்து, திரையரங்குகளில் படத்தை பார்த்தவர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
பின்னணி இசை
இந்நிலையில், விஜய் பிறந்த நாளை ஜூன் 22ந் தேதி கொண்டாட உள்ள நிலையில், இசையமைப்பாளர் அனிருத் தன் பங்கிற்கு பீஸ்ட் படத்தின் பின்னணி இசை ஒரிஜினலை வெளியிட்டு விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இவை அனைத்தும் தனது மனதிற்கு பிடித்த மிகவும் நெருக்கமான என தெரிவித்துள்ளார். பீஸ்ட் திரைப்படத்திற்கு கடும் விமர்சனம் எழுந்த போதும் அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்தன.

தளபதி 66
தளபதியின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை 6.01 மணிக்கு தளபதி 66 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட உள்ளது. இதனால், விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











