உஸ்பெகிஸ்தானில் வெளியான முதல் தமிழ் படம்... வெற்றிகரமாக ரிலீசான பீஸ்ட்!
சென்னை : நடிகர் விஜய் லீட் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த 13ம் தேதி ரிலீசான படம் பீஸ்ட். இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆயினும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. படம் வசூல் மழையையும் பொழிந்து வருகிறது. 200 கோடி ரூபாய் வசூலை எட்டிய விஜய்யின் 5வது படம் என்ற பெருமையையும் எட்டியுள்ளது.
Recommended Video

நடிகர் விஜய்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 13ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது பீஸ்ட். படத்தின் தலைப்பு உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக காணப்பட்டது. ஆனால் இந்தப் படம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
விஜய் படத்தின் முந்தைய படங்களை காட்டிலும் இந்தப்படம் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு காட்சி அமைப்புகள் இன்றி சொதப்பலான திரைக்கதையையே பெற்றிருந்தது. படத்தில் விடிவி கணேஷ் காமெடியில் ஸ்கோர் செய்துள்ளார்.

விஜய் -பூஜா கெமிஸ்ட்ரி
விஜய், பூஜா ஹெக்டே இடையிலான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்திருந்தது. அரபிக்குத்து, ஜாலிலோ ஜிம்கானா பாடல்களில் அவர்கள் இருவரும் போட்டிருந்த ஆட்டம் ரசிகர்களை குஷிப்படுத்தியிருந்தது. படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே இந்தப் பாடல்கள் வெளியாகி கோடிக்கணக்கான வியூஸ்களை பெற்றிருந்தது.

கலவையான விமர்சனங்கள்
படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் படத்தின் வசூலின் மூலம் தான் எப்போதுமே மாஸ் ஹீரோதான் என்பதை தற்போது விஜய் நிரூபித்துள்ளார். படம் தற்போது 200 கோடி ரூபாய் கலெக்ஷனை சர்வதேச அளவில் எட்டியுள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

உஸ்பெகிஸ்தானில் ரிலீஸ்
இந்நிலையில் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தற்போது படம் உஸ்பெகிஸ்தானில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு ரிலீசாகியுள்ள முதல் தமிழ் படம் என்ற பெருமையும் பீஸ்ட்டிற்கு கிடைத்துள்ளது. இதுவரை அங்கு எந்த தமிழ்ப்படமும் வெளியாகாத நிலையில் தற்போது பீஸ்ட் வெற்றிகரமாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

தமிழர்கள் ஒருங்கிணைப்பு
அங்கு பணியாற்றும் தென்காசியை சேர்ந்த முத்து கோபாலகிருஷ்ணன் என்பவர் தமிழர்களை ஒருங்கிணைக்க ஐங்கரன் பிக்சர்ஸ் மூலம் பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு ஏற்பாடு செய்துள்ளார். விஜய் படத்திற்காக தமிழர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் காத்துக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது.


Click it and Unblock the Notifications











