டீசரா? டிரைலரா? 3வது சிங்கிளா?...பீஸ்ட் அடுத்த அப்டேட் இன்று வருதா?...காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னை : பீஸ்ட் அடுத்த அப்டேட் இன்று வருவதாக சொல்லப்படுவதால், வர போவது டீசரா, டிரைலரா அல்லது 3வது சிங்கிள் பற்றிய அறிவிப்பா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். பீஸ்ட் அப்டேட் தாமதமாகி வருவதால் தங்கள் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீசிற்கு இன்னும் 16 நாட்களே உள்ளதால் ரிலீசிற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. உலகம் முழுவதும் பீஸ்ட் படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது.

விஜய் பேச்சு இல்லையா

விஜய் பேச்சு இல்லையா

பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிளாக அரபிக்குத்து பாடல் வெளியாகி செம டிராண்டானதுமே இனி அடுத்தடுத்த அப்டேட்கள், ஆடியோ வெளியீட்டு விழா எப்போது என ரசிகர்கள் கேட்டு வந்தனர். ஆனால் ஏதோ காரணங்களால் ஆடியோ வெளியீட்டு விழா நடக்காது என தகவல் வெளியானது. இதனால் விஜய்யின் பேச்சை கேட்க ஆவலாக காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

விஜய் டிவியில் வர போறாரா

விஜய் டிவியில் வர போறாரா

அதே சமயம் பீஸ்ட் டீமின் பேட்டி ஷுட்டிங் நேற்று நடைபெற்றதாம். மொத்தம் நான்கு பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த பேட்டி வீடியோவின் முதல் பாகம், பீஸ்ட் ரிலீசுக்கு முன் ஏப்ரல் 10 ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாம். மற்ற மூன்று பாகங்கள் படத்தின் ரிலீசுக்கு பிறகு வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் டிவியில் வர போகிறார் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 2013 ம் ஆண்டு வெளியான தலைவா படத்திற்கு பிறகு எந்த படத்தின் ப்ரொமோஷனுக்காகவும் விஜய் டிவியில் பேசவில்லை. கிட்டதட்ட 9 ஆண்டுகள் கழித்து தற்போது வர போகிறாராம்.

பீஸ்ட் டிரைலர் வருதா

பீஸ்ட் டிரைலர் வருதா

இதைத் தொடர்ந்து பீஸ்ட் டீசர் வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க, டீசருக்கு பதில் இரண்டாவது சிங்கிளாக விஜய் சொந்த குரலில் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டனர். இதனால் டீசர் கிடையாது. நேரடியாக டிரைலர் தான் ரிலீஸ் செய்ய போகிறார்கள் என்றார்கள். இது தொடர்பான அறிவிப்பு மார்ச் 31 ம் தேதி வெளியாகும், ஏப்ரல் 2 ம் தேதி யுகாதி அன்று பீஸ்ட் டிரைலர் வெளியாகும் என தகவல் பரவியது.

என்னது இன்னொரு பாட்டா

என்னது இன்னொரு பாட்டா

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று இன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அது பீஸ்ட் டீசரா அல்லது டிரைலர் பற்றிய அறிவிப்பா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதற்கிடையில் மற்றொரு தகவலாக பீஸ்ட் படத்தில் மூன்றாவதாக ஒரு பாடல் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அது தொடர்பான அறிவிப்பு இன்று வர வாய்ப்புள்ளதாக கூட சொல்லப்படுகிறது. இது க்ளைமாக்சில் வரும் பாடல் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அரபிக்குத்து பாடல், டாக்டர் படத்தில் வரும் செல்லம்மா பாடலை போல் படத்தின் கடைசியில் தான் இடம்பெறும் என சொன்னார்கள்.

பீஸ்ட்டுக்கு மட்டும் எதுவுமே கிடையாதா

பீஸ்ட்டுக்கு மட்டும் எதுவுமே கிடையாதா

ஆடியோ ரிலீஸ் இல்லை, மோஷன் போஸ்டர் இல்லை, க்ளிம்ப்ஸ் கூட இல்லை, தற்போது டீசரும் இல்லையா என கேட்டு ட்விட்டரில் ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள். இதன் காரணமாக WeWantBeastTeaser, BeastTrailer,BeastTeaser ஆகிய ஹேஷ்டேக்குகள் தொடர்ந்து டிரெண்டிங் ஆகி வருகின்றன. இதில் அப்டேட் வெளியிட தொடர்ந்து தாமதமாகி வருவது தொடர்பாக சன் பிக்சர்ஸ் கண்டபடி கேள்வி கேட்டு தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X