நெகடிவ் விமர்சனங்கள்... ட்விட்டர் டிரெண்டிங்கில் அடித்து நொறுக்கும் பீஸ்ட்

சென்னை : பீஸ்ட் படத்திற்கு பலரும் நெகடிவ் விமர்சனங்கள் கொடுத்து வரும் நிலையில், அவை அனைத்தையும் ட்விட்டரில் அடித்து நொறுக்கி, துவம்சம் செய்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று விஜய்யின் பீஸ்ட். இந்த படம் அஜித்தின் வலிமை படத்தின் வசூல் சாதனையை முறியடிக்குமா, நாளை ரிலீசாக உள்ள யாஷின் கேஜிஎஃப் 2 படத்தை விட அதிக வரவேற்பு பீஸ்ட் படத்திற்கு கிடைக்குமா என ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

Recommended Video

Beast Movie Review | பீஸ்ட் விமர்சனம் | Yessa ? Bussa ? | Vijay | Pooja | Nelson | Filmibeat Tamil

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல் பீஸ்ட் படம் ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே பட்ஜெட் தொகையான 190 கோடிகளை திரும்ப பெற்று விட்டது. அதோடு, கூடுதலாக 57 கோடிகளை லாபமாக பெற்று விட்டது. படத்தின் டிக்கெட் விற்பனையும் துவங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விட்டன. இதனால் படத்தின் முதல் நாள் வசூலும் சரி, வரவேற்பும் சரி வேற லெவலில் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

விமர்சனங்கள் என்ன சொல்லுது

விமர்சனங்கள் என்ன சொல்லுது

ஆனால் பீஸ்ட் படம் சுமார் என்ற அளவிலேயே விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படி ஒரு படத்தை எடுத்ததற்காக டைரக்டர் நெல்சனை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். சில விமர்சகர்கள் பீஸ்ட் படத்திற்கு 3, 2.5 என்ற அளவிலேயே ரேட்டிங் கொடுத்துள்ளனர். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தாலும் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கி வருகிறார்கள்.

ட்விட்டர் டிரெண்டிங்கில் பீஸ்ட்

ட்விட்டர் டிரெண்டிங்கில் பீஸ்ட்

நெகடிவ் விமர்சனங்களை தாண்டி ட்விட்டரில் #BlockBusterBEAST, #VeeraRaghavan, #பீஸ்ட் ஆகிய ஹேஷ்டேக்குகள் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகின்றன. இதில் மீம்கள் போட்டு சிலர் பீஸ்ட் படத்தை கலாய்த்து வந்தாலும், பீஸ்ட் படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் இருந்து வருகிறது. பீஸ்ட் படத்திற்கு ஆதரவான கமெண்ட்கள், ரசிகர்களின் விமர்சனங்கள் ஆகியவற்றை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

பிகில் இத விட மோசம்ப்பா

பிகில் இத விட மோசம்ப்பா

பிகில் படம் இதை விட மோசமான விமர்சனங்களை பெற்றது. ஆனால் அந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. 300 கோடி வசூல் பெற்ற படமாக அமைந்தது. அதே போல் தான் பீஸ்ட் படமும் ஆரம்பத்தில் நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும், இறுதியில் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமையும். வசூல் சாதனையும் படைக்கும் என நம்பிக்கையுடன் பலர் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X