ஒரு கோடி வியூஸ்.. சொல்லி அடிச்ச ஜாலியோ ஜிம்கானா.. ஆட்டம் போட இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க!

சென்னை: ரெக்கார்டு வைக்கிறதெல்லாம் நடிகர் விஜய் பட பாடல்களுக்கு கை வந்த கலை என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது ஜாலியோ ஜிம்கானா பாடல்.

Recommended Video

Vijay Fans Ask For Beast Update From Mohammad Shami | Filmibeat Tamil

எவன் வந்தாலும் பின் வாங்காம மோதி பார்க்கணும்டா, நம்ம வெயிட்ட காட்டணும்டா என பீஸ்ட் படத்தின் பாடல் வரிகளை விஜய் பாடும் போதே, மான்ஸ்டர் கேஜிஎஃப்பை பார்த்து பயந்து ஓடாமல், ஒரு நாள் முன்பாகவே வெளியாகி மாஸ் காட்ட காத்திருக்கிறது பீஸ்ட் படம்.

யூடியூபில் வியூஸ் மற்றும் லைக்குகளை அள்ளி வரும் இந்த பாடலுக்கு பிரபலங்கள் இப்பவே ரீல்ஸ்களை போட ஆரம்பித்துள்ளனர்.

200 மில்லியன் ரெக்கார்டு

200 மில்லியன் ரெக்கார்டு

ஹலமதி ஹபிபோ என உலகையே இடுப்பாட்ட வைத்த பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து பாடல் நேற்று 197 மில்லியனில் இருந்த நிலையில், 200 மில்லியன் ரெக்கார்டை அடைந்து ரவுடி பேபி பாடலை விட அதி விரைவாக 200 மில்லியன் வியூஸை கடந்த பாடல் என்கிற ரெக்கார்டை படைத்திருக்கிறது.

ஒரு கோடி வியூஸ்

ஒரு கோடி வியூஸ்

அரபிக் குத்து வெளியாகி ஒரு மாதத்தில் 20 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ள நிலையில், நேற்று வெளியான பீஸ்ட் செகண்ட் சிங்கிள் பாடலான ஜாலியோ ஜிம்கானா பாடல் ஒரு கோடி பார்வைகளை கடந்து அதிரடி சாதனையை புரிந்துள்ளது. 11 மில்லியன் பார்வைகளை கடந்து ராக்கெட் வேகத்தில் செல்லும் ஜாலியோ ஜிம்கானா 24 மணி நேரத்தில் 20 மில்லியன் வியூஸ் சாதனையை படைக்க விஜய் ரசிகர்கள் லூப் மோடில் பார்த்து வருகின்றனர்.

தியேட்டரில் கொண்டாட்டம்

தியேட்டரில் கொண்டாட்டம்

சென்னை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள திரையரங்குகள் ஜாலியோ ஜிம்கானா பாடல் ரிலீஸை முன்னிட்டு பிரத்யேகமாக அந்த பாடலை விஜய் ரசிகர்களுக்காக தியேட்டரில் திரையிட்டனர். அந்த பாடலை தியேட்டரில் ரசிகர்களுடன் வெறித்தனமாக கொண்டாடி ரசிகர்கள் மகிழ்ந்தனர். செல்போன் ஃபிளாஷ் லைட் அடித்தும் வீடியோ எடுத்தும் விஜய் ரசிகர்கள் கொண்டாடிய புகைப்படங்களும் டிரெண்டாகி வருகின்றன.

1.4 மில்லியன் லைக்ஸ்

1.4 மில்லியன் லைக்ஸ்

யூடியூபில் பாடல்களுக்கு கிடைக்கும் வியூஸை போலவே லைக்குகளும் அதிக எதிர்பார்ப்பை தூண்டி வருகின்றன. ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியான நிலையில், தற்போது வரை 1.4 மில்லியன் லைக்குகளை அள்ளி உள்ளது. பீஸ்ட் படத்தின் ரிலீஸை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X