ஜாலி ஓ ஜிம்கானா...எனர்ஜிடிக்கான பீஸ்ட் செகண்ட் சிங்கிள் அப்டேட் வந்தாச்சு

சென்னை : ரசிகர்களின் நீண்ட காத்திருப்பிற்கு பிறகு ஒரு வழியாக பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியிடப்படும் தேதியை எனர்ஜிடிக்கான ப்ரொமோ வீடியோவுடன் வெளியிட்டு அசத்தி உள்ளது சன் பிக்சர்ஸ்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர். ஃபஸ்ட் சிங்கிளான அரபிக்குத்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டு, தாறுமாறாக ஹிட்டாகி உள்ளன. பான் வேர்ல்ட் பாடலாக அமைக்கப்பட்ட அரபிக்குத்து யூட்யூப்பில் 175 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

 எதிர்பாராத பீஸ்ட் அப்டேட்

எதிர்பாராத பீஸ்ட் அப்டேட்

இதனால் அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். பீஸ்ட் அடுத்த அப்டேட்டாக டீசர், ரிலீஸ் தேதி, ஆடியோ ரிலீஸ் வரும் பலவற்றில் கூறி வந்தனர். அதன் பிறகு ஆடியோ ரிலீஸ் கிடையாது விஜய்யின் பேட்டியை ஏப்ரல் 14 ம் தேதி ஒளிபரப்ப போகிறார்கள் என பீஸ்ட் படம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகின ரசிகர்களை குழப்பமடைய வைத்தன. இதனால் #BeastUpdate என்ற ஹேஷ்டேக்கை தொடர்ந்து டிரெண்டிங் ஆக்கி வந்தனர் ரசிகர்கள்.

செகண்ட் சிங்கிள் லோடிங்

செகண்ட் சிங்கிள் லோடிங்

ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்ததால், முதலில் 7 மணி என்ற ட்வீட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ். சரியாக 7 மணிக்கு பீஸ்ட் செகண்ட் சிங்கிள் வெளியீடு பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். ஜாலி ஓ ஜிம்கானா என துவங்கும் எனர்ஜிடிக்கான, கலர்ஃபுல்லான இந்த பாடல் மார்ச் 19 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாம். இந்த பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடி உள்ளார்.

விஜய் குரலில் ஜாலி ஓ ஜிம்கானா

விஜய் குரலில் ஜாலி ஓ ஜிம்கானா

அனிருத் இசையில், நெல்சன் பாட்டெழுதிய இந்த பாடலை விஜய் பாடி உள்ளார். இந்த பாடலில் அனிருத், நெல்சன், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் பாடி ஆடுவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஜாலியாக இருங்க நண்பா என்ற கேப்ஷனுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பீஸ்ட் 100 வது நாள் ஷுட்டிங் என வெளியிடப்பட்ட போட்டோ இந்த பாடலுக்கான போட்டோ தானாம்.

லைக்ககளை அள்ளும் ப்ரொமோ

இந்த பாடலும், சன் பிக்சர்சின் அறிவிப்பும் லைக்குகளை குவித்து வருகிறது. இந்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் 65,000 க்கும் அதிகமான லைக்குகள் குவிந்துள்ளது. அதுவும் ப்ரோமோ வீடியோவிலேயே விஜய் இருக்கிறார், விஜய் சொந்த குரலில் பாடி உள்ள பாடல் என்பதால் ரசிகர்கள் இதை வேற லெவலில் கொண்டாடி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X