அடிதூள்...பீஸ்ட் அடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்...விஜய்க்கு வில்லன் யார் தெரியுமா ?

சென்னை : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியன் படமாகி உள்ள பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விஜய்யின் 65 வது படமாக தயாராகி வரும் இந்த படத்தின் ஷுட்டிங், ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள சன் டிவி அலுவலகத்தில் பூஜையுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து முதல் கட்ட ஷுட்டிங் ஜார்ஜியாவில் நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக சென்னையில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா செல்லும் படக்குழு

ரஷ்யா செல்லும் படக்குழு

அதற்கு பிறகு கொரோனாவால் நிறுத்தப்பட்ட ஷுட்டிங், சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாவது கட்ட ஷுட்டிங்கும் சென்னையில் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து இறுதிக்கட்ட ஷுட்டிங்கிற்காக பீஸ்ட் படக்குழு விரைவில் ரஷ்யா செல்ல உள்ளதாம். அங்கு தான் முக்கிய சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.

 லேட்டஸ்டாக இணைந்த செல்வராகவன்

லேட்டஸ்டாக இணைந்த செல்வராகவன்

இந்த படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு, அபர்னா தாஸ், வி டிவி கணேஷ், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். லேட்டஸ்டாக பீஸ்ட் படத்தில் டைரக்டரும், நடிகருமான செல்வராகவனும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாணி காயிதம் படத்தை தொடர்ந்து இரண்டாவதாக செல்வராகவன் நடிக்கும் படம் இது.

சாதனை படைத்த ஃபஸ்ட்லுக்

சாதனை படைத்த ஃபஸ்ட்லுக்

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஃபஸ்ட் மற்றும் செகண்ட் லுக் வெளியிடப்பட்டது. இதில் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. அத்துடன் குறைவான நேரத்தில் அதிகமானவர்கள் பார்த்த ஃபஸ்ட்லுக் போஸ்டர் என்ற சாதனையையும் பீஸ்ட் செய்துள்ளது.

விஜய்க்கு வில்லன் யார்

விஜய்க்கு வில்லன் யார்

பீஸ்ட் படத்தை பற்றி பல அப்டேட்கள் வந்து கொண்டிருந்தாலும் இதுவரை இந்த படத்தில் யார் வில்லன் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. விஜய்யின் சமீபத்திய படங்களில் வில்லன் ரோல் பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது. விஜய்க்கு இருக்கும் அதே அளவிற்கு வில்லன் ரோலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

மிரள வைத்த விஜய் பட வில்லன்கள்

மிரள வைத்த விஜய் பட வில்லன்கள்

விஜய் நடித்த மெர்சல் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிகில் படத்தில் ஜாக்கி ஷரோஃப், சர்கார் படத்தில் வரலட்சுமி, மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி என வலுவான ரோல்களாக காட்டப்பட்டுள்ளது. அதனால் பீஸ்ட்டில் விஜய்க்கு யார் வில்லன் என கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

இவர் தான் வில்லனா

இவர் தான் வில்லனா

இந்நிலையில் சமீபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாகோவும் பீஸ்ட் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்பட்டது. லேட்டஸ்ட் தகவலாக இந்த படத்தில் வில்லன்களில் ஒருவராக ஷைன் டாம் நடிக்கிறாராம். இவர் தவிர மேலும் இரண்டு வில்லன்களும் பீஸ்ட் படத்தில் உள்ளார்களாம். அவர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

என்னது விஜய்க்கும் இத்தனை வில்லன்களா

என்னது விஜய்க்கும் இத்தனை வில்லன்களா

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் 5 வில்லன்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் 3 வில்லன்கள் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் பெரிய சர்ப்ரைசாக அமைந்துள்ளது. அடுத்தடுத்த அப்டேட்களால் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X