அப்போ ரஷ்யா போகலையா... திடீரென லொக்கேஷனை மாற்றிய பீஸ்ட் படக்குழு

சென்னை : விஜய்யின் 65 வது படமான பீஸ்ட் படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு, அபர்னா தாஸ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் விஜய்க்கு 3 வில்லன்கள் இருப்பதாகவும், அதில் முதன்மை வில்லன் கேரக்டரில் டைரக்டர் செல்வராகவன் நடிக்கிறார் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மற்றொரு வில்லன் கேரக்டரில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாகோ நடிக்கிறார் என கூறப்பட்டது. மூன்றாவது வில்லன் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

வைரலான பூஜாவின் ஃபோட்டோ

வைரலான பூஜாவின் ஃபோட்டோ

பீஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவின் ஜார்ஜியாவில் துவங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் பூஜா ஹெக்டே உடனான பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக டான்ஸ் பயிற்சி எடுக்கும் வீடியோ மற்றும் ஃபோட்டோக்கள் இணையத்தில் வெளியாகி, வைரலானது.

ஷாப்பிங் மாலில் ஆக்ஷன்

ஷாப்பிங் மாலில் ஆக்ஷன்

இதைத் தொடர்ந்து மூன்றாவது கட்ட படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்றது. இதில் யோகிபாபு, பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னையில் ஷாப்பிங் மால் போன்று அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது வில்லன்களில் ஒருவரான சாகோ, ஷாப்பிங் மாலில் மக்களை பிடித்து வைத்திருப்பது போலவும், அவர்களை ஹீரோ விஜய் வந்து காப்பாற்றும் சீன் தான் எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா செல்ல திட்டமிட்ட டீம்

ரஷ்யா செல்ல திட்டமிட்ட டீம்

சென்னையில் நடக்கும் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடிவடைய உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் முதல் வாரத்தில் பீஸ்ட் படக்குழு ரஷ்யா பறக்க உள்ளதாகவும், அங்கு பெரும்பாலான முக்கிய சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாகவும் முதலில் கூறப்பட்டது.

அடுத்து இங்க தான் போறாங்களா

அடுத்து இங்க தான் போறாங்களா

ஆனால் லேட்டஸ்ட் தகவலாக, நான்காம் கட்ட படப்பிடிப்பிற்காக பீஸ்ட் படக்குழு டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாம். டெல்லியில் நடத்தப்பட உள்ள ஷுட்டிங் செப்டம்பர் 1 ம் தேதி முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 1 ம் தேதி துவங்கும் ஷுட்டிங் செப்டம்பர் 20 ம் தேதி வரை நடக்க உள்ளதாம்.

Recommended Video

பல்ஸ் ஆக்சிமீட்டர் எப்படி பயன்படுத்துவது.. அழகாக சொல்லிக்கொடுக்கும் பூஜா ஹெக்டே - வீடியோ
ரஷ்யா போகலையா

ரஷ்யா போகலையா

இதனால் பீஸ்ட் படக்குழு ஏற்கனவே கூறியதை போல் ரஷ்யா புறப்படுவார்களா, எப்போது படக்குழு ரஷ்யா செல்ல உள்ளது, அல்லது ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டிருந்த ஷுட்டிங்கை தான் டெல்லியில் நடத்த போகிறார்களா என்பது போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. சென்னை படப்பிடிப்பை முடித்து விட்டு ரஷ்யா செல்ல போவதாக கூறியவர்கள் திடீரென லொகேஷனை மாற்றி எதற்காக டெல்லி செல்கிறார்கள் என காரணமும் கூறப்படவில்லை.

சூப்பர் சந்தோஷத்தில் பூஜா

சூப்பர் சந்தோஷத்தில் பூஜா

இதற்கிடையில் சென்னையில் மூன்றாம் கட்ட ஷுட்டிங்கை முடித்து விட்டு மும்பை திரும்பிய பூஜா ஹெக்டேவை விமான நிலையத்தில் வழி மறித்த செய்தியாளர்கள், தென்னிந்தியாவின் முன்னணி நடிகரான விஜய்யுடன் நடிக்கும் அனுபவம் எப்படி உள்ளது என கேட்டனர். அதற்கு பதிலளித்த பூஜா உடனடியாக , அவருடன் நடிப்பது சூப்பர் சந்தோஷத்தை தருவதாக கூறினார்.

பீஸ்ட்டுக்கு முன் தளபதி 66

பீஸ்ட்டுக்கு முன் தளபதி 66

விறுவிறுப்பாக நடந்து வரும் பீஸ்ட் படத்தின் வேலைகளை இந்த ஆண்டிற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தை 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். பீஸ்ட் ரிலீசுக்கு முன்னதாகவே இந்த ஆண்டு இறுதியில் வம்சி பைடிபள்ளி இயக்க உள்ள தளபதி 66 படத்தின் வேலைகளை விஜய் துவக்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X