Don't Miss!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்னது பீஸ்ட் ட்ரெயிலர்ல கல்லா கட்டியிருக்காங்களா... ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட தகவல்!
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெயிலர் கடந்த 2ம் தேதி மாலை வெளியானது. இந்த ட்ரெயிலரை திரையரங்குகளில் சென்று பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியிருந்தார்.
சொல்லியடிச்ச
கில்லி..
24
மணி
நேரத்தில்
30
மில்லியன்
வியூஸ்..
வலிமையை
ஓரங்கட்டிய
பீஸ்ட்
டிரைலர்!

விஜய்யின் பீஸ்ட்
விஜய்யின் பீஸ்ட் படம் மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அவரது பல முந்தைய ரெக்கார்டுகளை படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை பீட் செய்து வருகிறது. இந்திய அளவில் படத்தினை பார்க்கும் ஆர்வம் தற்போது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாடல்களுக்கு சிறப்பான வரவேற்பு
முன்னதாக படத்தின் பாடல்கள் அரபிக்குத்து மற்றும் ஜாலிலோ ஜிம்கானா போன்றவை வெளியாகி ரசிகர்களை தூங்க விடாமல் செய்தது. அந்த அளவிற்கு விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் ஆட்டம் அந்தப் பாடல்களில் இருந்தது. லிரிக் வீடியோவாக வெளியான நிலையிலும் அதிகமான வரவேற்பை இந்தப் பாடல்கள் பெற்றன.

கோடிக்கணக்கான வியூஸ்
பாடல்கள் கோடிக்கணக்கான வியூஸ்களை தாண்டி தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளன. ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் இந்தப் பாடல்களை கொண்டாடி வருகின்றனர். அரபிக்குத்து பாடலுக்கு நடிகைகள் சமந்தா, ராஷ்மிகா ஏன் படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவும் நடனமாடி வீடியோக்களை பதிவிட்டனர்.

30 மில்லியனை கடந்த ட்ரெயிலர்
இதனிடையே கடந்த 2ம் தேதி படத்தின் ட்ரெயிலர் வெளியாகி தற்போது 30 மில்லியன் வியூஸ்களையும் ஏராளமான லைக்ஸ்கள் கமெண்ட்டுகளையும் பெற்று அதிரடி கிளப்பி வருகிறது. இந்நிலையில், இந்த ட்ரெயிலர் திரையரங்குகளில் மற்ற படங்களுக்கு மத்தியில் ஒளிபரப்பப்பட்டது.

திரையரங்குகளில் ட்ரெயிலர்
இதையடுத்து திரையரங்க வாயில்களில் காத்திருந்து ரசிகர்கள் பெரிய திரையில் இந்த ட்ரெயிலரை கண்டு ரசித்தனர். முன்னதாக படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் அருகிலுள்ள திரையரங்குகளில் ட்ரெயிலரை பார்த்து ரசிக்கும்படி ரசிகர்களுக்கு தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவுறுத்தியிருந்தார்.

ட்ரெயிலரை பார்க்க ரூ.50 வசூல்
இந்நிலையில் இந்த 2.56 நிமிட ட்ரெயிலரை காண மதுரை திரையரங்கில் ஒருவருக்கு 50 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மதுரையில் சினிப்பிரியா என்ற திரையரங்கில் மூவருக்கு 150 ரூபாய் இந்த ட்ரெயிலரை பார்ப்பதற்காக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரபல விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் டிக்கெட்டுக்கான புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதிகமான தொகை வசூல்
ஒரு படத்தின் டிக்கெட்டே ஏறக்குறைய அந்த விலையில் உள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலருக்காக இத்தகைய தொகை வசூலிக்கப்பட்டுள்ளது விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மிகப்பெரிய ஹீரோ மற்றும் அவரது வெறித்தனமான ரசிகர்களை வைத்து செய்யும் இத்தகைய திரையரங்க உரிமையாளர்கள் குறித்து ப்ளூ சட்டை மாறன் வெளிக்காட்டியுள்ளார்.