»   »  அடிவிழுந்துக்கிட்டு இருக்கும்போது மாட்டிறைச்சி பற்றி நடிகர் சித்தார்த் 'தில் ட்வீட்'

அடிவிழுந்துக்கிட்டு இருக்கும்போது மாட்டிறைச்சி பற்றி நடிகர் சித்தார்த் 'தில் ட்வீட்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டியர் பாஜக உங்களிடம் அதிகாரம் உள்ளது. அதை வைத்து இந்தியாவை மேம்படுத்துங்கள். மக்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். இந்து தேசப் பரப்புரையை நிறுத்துங்கள். நாம் அதைவிட சிறந்தவர்கள் என நடிகர் சித்தார்த் ட்வீட்டியுள்ளார்.

மாட்டிறைச்சி விவகாரம் சூடுபிடித்துள்ளது. மாட்டிறைச்சி விருந்து வைத்த சென்னை ஐஐடி மாணவர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மாட்டிறைச்சி விவகாரம் குறித்து நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக

டியர் பாஜக உங்களிடம் அதிகாரம் உள்ளது. அதை வைத்து இந்தியாவை மேம்படுத்துங்கள். மக்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். இந்து தேசப் பரப்புரையை நிறுத்துங்கள். நாம் அதைவிட சிறந்தவர்கள்.

மாடு

மாட்டு சந்தைகள் விவகாரம் தேவையில்லாதது. பசுவதையை மாநில அரசுகள் அனுமதிக்கிறதோ இல்லையோ மத்திய அரசு இதில் தலையிடத் தேவையில்லை.

இந்தியர்கள்

நம்மில் பலர் #bhakts அல்லது #libtards இல்லை. நாம் இந்தியர்கள் மட்டுமே. வாழ்வோம் வாழவிடுவோம். வெறுப்பை நிறுத்துங்கள்.

முத்திரை

நாளை நீங்களும் Anti-Indian முத்திரை குத்தபடுவீர்கள் என்று சித்தார்த்தின் ட்வீட்டை பார்த்த ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

English summary
Actor Siddharth tweeted that, 'Dear #BJP you have power. Empower #India. Stay out of people's private choices. Stop this #Hindu nation narrative. We are better than that.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil