»   »  'ஒரு 'பீப்'பால இப்படி ஆப்பு வாங்கிட்டியே... நீ பேசாம கனடாவிலேயே இருந்துருப்பா!'

'ஒரு 'பீப்'பால இப்படி ஆப்பு வாங்கிட்டியே... நீ பேசாம கனடாவிலேயே இருந்துருப்பா!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

இலை நிறைய விருந்து வைத்து ஓரத்தில் எதையோ வைத்த கதையாகிவிட்டது அனிருத்தின் திறமை.

அவ்வப்போது பழைய பாடல்களை தூசி தட்டி புது சட்டை மாட்டி ஹிட்டடித்தாலும், அனிருத்தின் திறமை மீது யாருக்கும் சந்தேகம் இருந்ததில்லை. சரக்குள்ள பார்ட்டி என்றுதான் பெரிய பெரிய படங்களிலும் அவரை ஒப்பந்தம் செய்தார்கள்.

ஆனால் இந்த பீப் பாட்டுக்குப் பிறகு அனிருத் என்றாலே த்தூ என முகம் சுழிக்க ஆரம்பித்துவிட்டனர். அனிருத் மீதிருக்கும் அசிங்க இமேஜ் தங்கள் படங்களுக்கும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில், பல லட்சங்களை அட்வான்ஸாக கொட்டிக் கொடுத்து ஒப்பந்தம் செய்தவர்கள் எல்லாம், 'தம்பி.. வேணாம்பா.. போய் புதுப்புது பீப் பாட்டு போட்டு வெளையாடுப்பா' என்று கூற ஆரம்பித்துள்ளார்களாம்.

Beep effect: Another setback to Anirudh

ஏற்கெனவே 3 பெரிய படங்களிலிருந்து அவரைக் கழட்டிவிட்டார்கள் அல்லவா...

அடுத்து அவரை அறிமுகப்படுத்திய கொக்கி குமாரும் நீக்கிவிட்டார். விஷயம் தெரிந்து டென்ஷனான பீப் தம்பி உறவுக்கு போனைப் போட்டு புலம்பித் தள்ள, "நீ பண்ண காரியம் அப்படி... ஒரு பீப்பால இப்படி ஆப்பு வாங்கிட்டியே... எந்த மாதிரி குடும்பத்திலிருந்து வந்துட்டு என்ன வேலை செய்திருக்கான் பார்னு கண்டபடி எங்களைத் திட்டறாங்கடா... கொஞ்சநாளைக்கு நீ கோடம்பாக்கத்தை மறந்துட்டு கனடா பக்கமே கச்சேரி பண்ணிக்கிட்டிரு,' என்று கோபமாகத் திட்டியதாம் உறவு!

English summary
Anirudh is in big trouble now. Recently his close relative blasted his for his Beep Song and aftereffects.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil