»   »  பீப் பாடல்: நடிகர் சிம்பு முன் ஜாமீன் மனு தாக்கல்... விசாரணை நாளை தொடக்கம்

பீப் பாடல்: நடிகர் சிம்பு முன் ஜாமீன் மனு தாக்கல்... விசாரணை நாளை தொடக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார். மனு மீதான விசாரணை நாளை தொடங்குகிறது.

பீப் பாடல் விவகாரத்தில் அனிருத்திற்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. நானே முழுப்பொறுப்பையும் ஏற்கிறேன் என்று நடிகர் சிம்பு சமீபத்தில் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

Beep Song: Actor Simbu Bail petition in Madras High Court

இந்த விவகாரத்தில் இயக்குனரும், சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் தனது பங்கிற்கு தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். தற்போது இந்த விவகாரத்தில் கோவை போலீசார் மீண்டும் சிம்பு, அனிருத் இருவருக்கும் சம்மன் அனுப்பி வருகின்ற 2 ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் சிம்பு, அனிருத் இருவர் மீதும் மேலும் 2 வழக்குகள் புதியதாக போடப்பட்டு உள்ளன.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த வழக்கில் கோவை போலீசார் 2 வது முறையாக சம்மன் அனுப்பிய நிலையில் நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் சிம்புவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை துவங்குகிறது.

பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு அமையுமா? என்பது நாளை தெரிய வரும்.

English summary
Beep Song Controversy: Actor Simbu Anticipatory Bail Petition in the Madras High Court.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil