twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிம்புவின் பாடலை லீக் செய்த நபரைக் கண்டுபிடிக்க சென்னை போலீஸ் தீவிரம்

    By Manjula
    |

    சென்னை: சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடலை யூடியூபில் லீக் செய்த நபர் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சென்னை போலீஸார் இறங்கியுள்ளனராம்.

    கடந்த வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பீப் பாடல் விவகாரத்தில் கோவை போலீசார் சிம்பு, அனிருத் இருவருக்கும் நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி உள்ளனர்.

    வரும் 19 ம் தேதிக்கு முன்னதாக கோவை போலீசார் இருவரையும் நேரில் ஆஜராகச் சொல்லி உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இதற்கிடையே மற்றொரு பக்கம் சென்னை போலீசார் அவருக்கு எதிரான ஆதாரங்களை தற்போது சேகரித்து வருகின்றனராம்.

    பீப் பாடல்

    பீப் பாடல்

    சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் கடந்த வாரம் இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மாதர் சங்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் கோவை போலீசார் சிம்பு, அனிருத் இருவருக்கும் நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி உள்ளனர்.

    குவியும் புகார்கள்

    குவியும் புகார்கள்

    இந்த வழக்கில் நேற்று கடந்த 2 நாட்களாக சென்னையிலும் இருவருக்கும் எதிரான புகார்கள் குவிந்து வருகின்றன. இதுவரை சென்னையில் மட்டும் சுமார் 5 க்கும் மேற்பட்ட புகார்கள் சிம்பு, அனிருத்தை கைது செய்யக் கோரி குவிந்திருக்கின்றன. மேலும் சிம்புவின் வீட்டு முன்னர் மாணவர் சங்கம், மகளிர் அமைப்புகள் ஆகியோர் தொடர்ந்து போரட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வழக்குப்பதிவு

    வழக்குப்பதிவு

    கோவை போலீஸ் வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பியுள்ள இந்த வழக்கில் சென்னை போலீசார் இதுவரை வழக்குப்பதிவு எதுவும் செய்யவில்லை. அதேசமயம், மாறாக சிம்பு மற்றும் அனிருத்துக்கு எதிரான ஆதாரங்களை அவர்கள் திரட்டி வருகின்றனர்.

    போலீஸ் தரப்பில்

    போலீஸ் தரப்பில்

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது "பிரச்சினைக்குரிய ஆபாச பாடல் வெளியான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நடிகர் சிம்பு அதனை நான் வெளியிடவில்லை என்று கூறி இருக்கிறார்.

    பாடலை லீக் செய்தது யார்?

    பாடலை லீக் செய்தது யார்?

    யூடியூப் மூலமாகவே அந்த பாடல் வெளியில் வந்துள்ளது. அப்படியென்றால் சிம்பு பாடி இருப்பதாக கூறப்படும் பாடலை வெளியிட்டவர் யார்? என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளோம். அந்த நபர் பிடிபட்டால் அவர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணைக்கு செல்வோம்.

    வாய்ஸ் டெஸ்ட்

    வாய்ஸ் டெஸ்ட்

    சர்ச்சைக்குரிய பாடலை சிம்புதான் பாடினாரா? என்பதையும் உறுதிபடுத்த வேண்டும். இதற்காக ‘வாய்ஸ் டெஸ்ட்' என்று அழைக்கப்படும் குரல் பரிசோதனையும் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்த சோதனையை தடயவியல் நிபுணர்களே நடத்துவார்கள்.

    ஆதாரங்கள் கைக்கு வந்தவுடன்

    ஆதாரங்கள் கைக்கு வந்தவுடன்

    சிம்புவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டியவுடன் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இதன் பின்னரே, குரல் பரிசோதனை நடைபெறும். சிம்புவை வரவழைத்து சம்பந்தப்பட்ட பாடல் வரிகளை பாடச்சொல்லி அதனை பதிவு செய்து வைத்துக் கொள்வார்கள். பின்னர் இணையதளத்தில் வெளியான பாடலுடன் அதனை ஒப்பிட்டு பார்த்து இரண்டுக்கும் ஒரே குரல் தானா? என்பதை ஆய்வு செய்வார்கள்.

    ஆதாரங்களை வைத்தே நடவடிக்கை

    ஆதாரங்களை வைத்தே நடவடிக்கை

    இந்த சோதனையை தடயவியல் நிபுணர்கள் மேற்கொள்வார்கள்.இப்படி திரட்டப்படும் ஆதாரங்களின் உண்மை தன்மையை வைத்தே சிம்புவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம்". என்று சென்னை போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    பாஸ்போர்ட்

    பாஸ்போர்ட்

    தற்போது சிம்பு தரப்பில் இருந்து கைது நடவடிக்கையைத் தவிர்க்க முன் ஜாமீன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறுகின்றனர். அனிருத் தற்போது கனடாவில் இருப்பதால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதே போல சிம்புவும் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லக் கூடாது என்பதற்காக தற்போது சிம்புவின் பாஸ்போர்ட்டை முடக்கும் முயற்சியில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனராம்.

    சட்டப்படி

    சட்டப்படி

    சிம்பு இந்த விவகாரத்தில் அனைத்தையும் சட்டப்படி எதிர்கொள்ளத் தயார் என்று கூறியிருக்கிறார். அதே நேரம் பல்வேறு தரப்புகளில் இருந்தும் அவருக்கு நெருக்கடி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Beep Song Issue: Chennai police now Collecting Evidence Against Simbu. The Seizure of his Passport,the Police are also Taking Action.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X