»   »  சிம்பு தன் பேட்டியில் கூறிய "அடிடா உதைடா" பாடல் இதுதான்... எழுதியவர் தனுஷ்!

சிம்பு தன் பேட்டியில் கூறிய "அடிடா உதைடா" பாடல் இதுதான்... எழுதியவர் தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பீப் பாடல் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள நடிகர் சிம்பு, அதில் ஒரு பாடலைக் குறிப்பிட்டு இதையெல்லாம் யாரும் விமர்சிக்கவில்லையே என்று கேட்டிருந்தார். அவர் குறிப்பிட்ட அந்தப் பாடலை எழுதியவர் தனுஷ் என்பதால் புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

கடந்த பல நாட்களாக தமிழ்நாட்டில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் பீப் பாடல் விவகாரத்தில் இந்தப் பாடல் தொடர்பான அனைத்துப் பொறுப்புகளையும் தானே ஏற்பதாக நடிகர் சிம்பு தெரிவித்திருக்கிறார்.

Beep Song Issue: Simbu Compare his Songs

அவ்வாறு அவர் அளித்திருக்கும் பேட்டியில், இதே தமிழ் சினிமாவில் பெண்களைத் திட்டி அடிடா அவள, ஒதைடா அவளை என்று ஏராளமான பாடல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால் நான் பெண்களுக்கு ஆதரவாகப் பாடிய பாடலை அந்தப் பாடல் வரிகளை முழுமையாகக் கேட்காமலே, என்னை எல்லோரும் தொடர்ந்து காயப்படுத்தி வருகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

சிம்பு கூறியிருக்கும் இந்தப் பாடல் தற்போது கவனிப்புக்குள்ளாகியுள்ளது. சிம்பு குறிப்பிட்டுள்ள அந்தப் பாடல் தனுஷின் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படத்தில் இடம் பெற்றது. தனுஷ் எழுதி, தனது அண்ணனும் இயக்குநருமான செல்வராகவனுடன் இணைந்து எழுதிப் பாடிய இந்தப் பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார்.

வெளியான புதிதில் பெண்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகளை இந்தப் பாடல் சம்பாதித்தது. அப்படிப் பட்ட இந்த பாடலைத் தான் தற்போது சிம்பு சுட்டிக்காட்டி இருக்கிறார். தனுஷின் பாடலைக் குறிப்பிட்டுச் சுட்டுக் காட்டி சிம்பு பேசியிருப்பது புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

English summary
Beep Song Issue: "Beat her and Kick her, the Following Songs are the Same in Tamil cinema" Actor Simbu Asked Doubt in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil