»   »  பீப் பாடல்: சிம்பு தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிந்தது...தீர்ப்பு அடுத்த வாரத்தில்

பீப் பாடல்: சிம்பு தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிந்தது...தீர்ப்பு அடுத்த வாரத்தில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பீப் பாடல் வழக்கில் 2 இடங்களில் ஆஜராகும் உத்தரவை மாற்றக் கோரி சிம்பு தொடர்ந்த வழக்கில், தீர்ப்பை அடுத்த வாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கடந்த 2015 ம் ஆண்டில் வெளியான பீப் பாடல் தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்புகளை உண்டு பண்ணியது. இதற்குக் காரணமான சிம்புவை கைது செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

Beep Song: Madras High Court Deferred Judgement

இந்த வழக்கில் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் சிம்புவிற்கு வழங்கியது.இந்நிலையில் சென்னை, கோவை என்று 2 இடங்களில் நேரில் ஆஜராகும் உத்தரவை மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் சிம்பு வழக்குத் தொடர்ந்தார்.

மேலும் சென்னை தவிர்த்து கோவையில் மட்டும் ஆஜராகவும் அவர் அனுமதி கேட்டிருந்தார்.இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கின் சாராம்சங்களை விசாரித்த பின்னர் தீர்ப்பை அடுத்த வாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.இதில் அரசுத் தரப்பு வக்கீல் சிம்பு நேரில் ஆஜராவதைத் தடுக்கவே வழக்கு வழக்கு போடுகிறார் என்று புகார் ஒன்றை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

நாளை இது நம்ம ஆளு படத்தின் பாடல்கள் வெளியீட்டில் கலந்து கொள்ள சிம்பு வரும் போது அவரைக் கைது செய்ய காவல்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதனைத் தடுக்கவே சிம்பு தொடர்ந்து வழக்குகளை போட்டு வருவதாக கூறுகின்றனர்.

English summary
Beep Song: Simbu Filed a Case on Madras High Court, now the Court has Deferred Judgement for next week.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil