»   »  நடிகர் சங்கம் சிம்புவை ஆதரிக்காதது ஏன்?.. கேட்கிறார் ராதிகா சரத்குமார்

நடிகர் சங்கம் சிம்புவை ஆதரிக்காதது ஏன்?.. கேட்கிறார் ராதிகா சரத்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சங்கம் சிம்புவை ஆதரிக்காதது ஏன்? என்று நடிகை ராதிகா சரத்குமார் காட்டமாக கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார்.

இந்த விவகாரத்தில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் சரத்குமார் சிம்புவை இன்னும் ஏன் கண்டிக்கவில்லை என்று நடிகர் சங்கத்தினரிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் சரத்குமாரின் மனைவியான ராதிகா சிம்புவிற்கு நடிகர் சங்கம் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, சிம்புவிற்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.

பீப் பாடல்

பீப் பாடல் விவகாரத்தில் ராதிகா சரத்குமார் சிம்புவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவர் கூறும்போது "பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என்று கேள்வி கேட்டு நடிகர் சங்கம் இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.மேலும் நாளை உங்களில் யாரேனும் பாத்ரூமில் பாட்டுப் படும்போதோ அல்லது புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும்போதோ இது போன்ற சம்பவங்கள் நிகழலாம்" என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

காரசாரமான வாதம்

காரசாரமான வாதம்

இந்த டிவிட்டுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் பதில் டிவிட் போட்டு வருகின்றனர். இதனால் அந்த இடமே பெரும் களேபரமாக காணப்படுகிறது. அதில் சில டிவிட்டுகளுக்கு ராதிகா சூடான பதிலும் கொடுத்துள்ளார்.

நீங்க ரொம்ப லேட்

ராதிகாவின் இந்த கருத்திற்கு அவர்கள் ஏற்கனவே தங்கள் கண்டனத்தை தெரிவித்து விட்டனர். நீங்க ரொம்ப லேட் என்று முத்து என்னும் ரசிகர் கூற அவர்கள் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை நீங்க ரொம்ப லேட் என்று ராதிகா பதிலளித்தார். இதற்கு அந்த ரசிகர் யார் லேட் என்பதை அவர்கள் தெளிவு படுத்துவார்கள் என்று கூறினார். இதற்கு ராதிகா அவர்கள் இந்த விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை.இது அதிகாரப்பூர்வமாக வெளியான பாடல் அல்ல" என்று கூறினார்.

நடிகர் சங்கத்தின்

இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத்தின் பங்கு எதுவும் இல்லை. இந்த நேரத்தில் சரத்குமார் சார் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று விவேகானந்தன் என்னும் ரசிகர் கேட்டார். இதற்கு ராதிகா நடப்புப் பிரச்சினையை பற்றி மட்டும் பேசுங்கள், இந்த பிரச்சினையில் ஒரு தனிப்பட்ட பாடலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று பதில் கூறினார்.

சரத்குமார்

சரத்குமார்

இந்த விவகாரத்தில் ராதிகாவின் கணவரும், முன்னாள் நடிகர் சங்கத் தலைவருமான சரத்குமார் இந்தப் பாடல் தவறானது. அது யார் பாடியிருந்தாலும், எழுதியிருந்தாலும் என்று இந்தப் பாடல் குறித்த தனது கருத்தை சமீபத்தில் வெளிப்படுத்தினார்.மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சங்கம் ஏன் மெளனமாக உள்ளது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஏன் மெளனமாக உள்ளார் என்றும் கேள்விகள் எழுப்பி சரத்குமார், சிம்புவின் பீப் பாடலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார்.

எதிர்ப்பும், ஆதரவும்

எதிர்ப்பும், ஆதரவும்

இந்த விவகாரத்தில் நடிகர் சரத்குமார் சிம்புவை கண்டிக்கும்படி நடிகர் சங்கத்திடம் கேள்வி எழுப்பி, சிம்புவிற்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அதே நேரம் நடிகர் சங்கம் இந்த விவகாரத்தில் சிம்புவிற்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் சிம்புவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Radika Sarathkumar Wrote on Twitter "Nadigar Sangham take a stand .This can happen to any one of you also for singing in the bathroom and taking selfies".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil