»   »  பீப் பாட்டு: உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடிச்சு தூக்குல போடுங்க!- ஒய்.ஜி.மகேந்திரா

பீப் பாட்டு: உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடிச்சு தூக்குல போடுங்க!- ஒய்.ஜி.மகேந்திரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடும் கண்டனம் மற்றும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பீப் பாடலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து தூக்கிலிட வேண்டும் என்று ஒய்.ஜி.மகேந்திரா கருத்துத் தெரிவித்துள்ளார்.

பீப் பாடலுக்கு எதிராக நாளுக்குநாள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

கண்டனம்

கண்டனம்

இப்பாடல் குறித்து ஏற்கனவே கங்கை அமரன், வைரமுத்து, பா.விஜய் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில்அனிருத்தின் நெருங்கிய உறவினரான நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவும் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

ஒய்.ஜி.மகேந்திரா

ஒய்.ஜி.மகேந்திரா

ஒய்.ஜி.மகேந்திரா தனது பேஸ்புக் பக்கத்தில் ஆவேசமாக சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அவர் கூறும்போது "மற்றுமொரு சர்ச்சைக்குரிய தமிழ்ப் பாடல் பீப் பாடல். அனிருத் எனக்கும் அந்தப் பாடலுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு இல்லை எனத் தெளிவாகக் கூறி இருக்கிறார்.

பொறுப்பாளி யார்

பொறுப்பாளி யார்

இந்தப் பாடலுக்கு பொறுப்பாளி யாராக இருந்தாலும் இந்தப் பாடலை நான் மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். இந்தப் பாடல் உருவாக, வெளியாக காரணம் யார் என்பதைக் கண்டறியவேண்டும். இந்த அசிங்கமான பாடலில் எந்தவொரு உணர்வும், எந்தவொரு மெலொடியும் இல்லை.

குழந்தைகள்

குழந்தைகள்

குழந்தைகளை அந்த பீப் சத்தத்தில் மறைந்திருக்கும் வார்த்தை என்ன எனக் கேட்கச் செய்து, பெரியவர்களை சங்கடத்தில் ஆழ்த்தும் பாடலாக பீப் பாடல் இருக்கிறது.

இந்தப் பாடல் தேவையா?

இந்தப் பாடல் தேவையா?

நாடு இருக்கும் நிலையில் இந்தப் பாடல் தேவையான ஒன்றா? லீக்கானதோ, ஆகாததோ எனினும் மூளை பாதிக்கப்பட்ட மனிதனால் மட்டுமே இப்படி ஒரு பாடலை உருவாக்க இயலும்.

கண்ணதாசன்

கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன் தற்போது தனது கல்லறையில் கண்டிப்பாக இந்தப் பாடலால் நிம்மதியின்றியே இருப்பார். ஆனாலும் யார் மீதேனும் தவறான பழிகள் வந்து சேரும் முன் உண்மையான நபரைக் கண்டறிந்து அவரைத் தூக்கிலிட வேண்டும்" என்று ஒய்.ஜி.மகேந்திரா தனது கருத்தினைப் பதிவு செய்திருக்கிறார்.

அனிருத் - ஒய் ஜி உறவு என்ன?

அனிருத் - ஒய் ஜி உறவு என்ன?

ரஜினியின் சகலைதான் ஒய் ஜி மகேந்திரன். ரஜினி, ஒய்ஜி ஆகியோரின் மனைவிகளான லதா, சுதாவுடன் பிறந்தவர்தான் அனிருத்தின் தந்தை ரவிச்சந்திரன் என்கிற ரவி ராகவேந்திரா. ரஜினி, ஒய் ஜி மகேந்திரனின் மைத்துனர் மகன் இந்த அனிருத்.

English summary
Beep Song Issue: Veteran Actor Ygee.Mahendra Says " Responsible for this Atrocious song and then of course Hang Them".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil