»   »  ரிலீஸ் ஆவதற்குள் அடுத்த படமும் ஓவர் - 'அப்பா' சென்டிமென்ட்டால் கலக்கும் இயக்குநர்!

ரிலீஸ் ஆவதற்குள் அடுத்த படமும் ஓவர் - 'அப்பா' சென்டிமென்ட்டால் கலக்கும் இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'வெண்ணிலா கபடிகுழு', 'பாண்டியநாடு', 'ஜீவா' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சுசீந்திரன் தனது அடுத்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அதற்கடுத்த பட வேலைகளையும் கிட்டத்தட்ட முடித்து விட்டார்.

'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் நிலையில் தனது அடுத்த படத்தின் வேலைகளையும் 60% முடித்துவிட்டார் இயக்குநர் சுசீந்திரன்.

'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தையடுத்து சுசீந்திரன் இயக்கும் புதிய படத்திற்கு 'ஏஞ்சலினா எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு படம் :

ஒரே நேரத்தில் இரண்டு படம் :

'மாநகரம்' சந்தீப், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கும் 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்துடன் சுசீந்திரன் மற்றொரு படத்தையும் இயக்கி வந்தார். இந்த படத்தின் வேலைகளும் இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

புதுமுகங்கள் :

புதுமுகங்கள் :

சுசீந்திரன் இயக்கிய 'ஆதலால் காதல் செய்வீர்' படம் போல இந்த படத்திலும் முக்கிய பாத்திரங்களில் புதுமுகங்களே நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

ஏஞ்சலினா :

ஏஞ்சலினா :

கல்லூரி மாணவர்களை சுற்றி நடக்கும் கதையைக் கொண்ட இந்தப் படத்திற்கு ஒரு பெண்ணின் பெயரைச் சூட்டப்போவதாக சுசீந்திரன் அறிவித்திருந்தார். அதன்படி இப்போது படத்திற்கு 'ஏஞ்சலினா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'ஏஞ்சலினா' டைட்டில் போஸ்டரை சுசீந்திரனின் தாய், தந்தை இணைந்து வெளியிட்டனர்.

அப்பாதான் எல்லாமே :

அப்பாதான் எல்லாமே :

தன்னுடைய வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் தன்னுடைய தந்தை நல்லுசாமிதான் என்று அழுத்தமாக நம்புகிறவர் இயக்குநர் சுசீந்திரன். அவர் முதன்முதலில் இயக்கிய 'வெண்ணிலா கபடிகுழு' படத்தின் கதை, அவருடைய தந்தையின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பா சென்டிமென்ட் :

அப்பா சென்டிமென்ட் :

தான் இயக்கும் ஒவ்வொரு படத்தின் விழாக்களிலும் தன்னுடைய தந்தையை மேடையேற்றி அழகுபார்ப்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறார் சுசீந்திரன். அவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவிருக்கிற 'அறம் செய்து பழகு' படத்தின் பெயர் 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றப்பட்டபோதும் தன்னுடைய தந்தையைக் கொண்டே புதிய பெயரை அறிவித்தார் சுசீந்திரன்.

English summary
The new film next to 'Nenjil Thunivirundhal' directed by Suseenthiran is titled 'Angelina'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil