அடிதூள்...வேற லெவல் மாஸ்...ரிலீசுக்கு முன்பே கோடிகளை குவிக்கும் வலிமை
சென்னை : அஜித் நடித்துள்ள வலிமை படம் ரிலீசுக்கு முன்பே போட்ட தொகையை அள்ளி விட்டது. வலிமை படத்தின் வியாபாரம் சூடுபிடித்துள்ளதால் படக்குழுவினரும், ரசிகர்களும் உற்சாகத்தில் மிதக்கிறார்கள்.
ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் ஜனவரி 14 ம் தேதி ரிலீசாக உள்ளது. வலிமை படம் சென்சாரின் ஒப்புதலையும் பெற்று, யுஏ சான்று பெற்று விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் வலிமை படத்தின் வியாபாரம் பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்திற்கு இவ்வளவு சம்பளமா
போனி கபூர் தயாரித்துள்ள வலிமை படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.150 கோடி. இந்த படத்திற்காக அஜித்திற்கு மட்டும் ரூ.70 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஹச்.வினோத்திற்கு ரூ.4 கோடியும், ஹுமா குரேஷிக்கு ரூ.1 கோடியும், வில்லன் கார்த்திகேயாவிற்கு ரூ.60 லட்சங்களும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

யாருக்கு எவ்வளவு சம்பளம்
இது தவிர இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவிற்கு ரூ.1.25 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. DOP நிரவ் ஷாவிற்கு ரூ.1 கோடியும், ஸ்டன்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயனுக்கு ரூ.1.4 கோடியும் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

எத்தனை கோடி வியாபாரம்
இந்நிலையில் வலிமை படத்தின் தியேட்டர் உரிமம் மட்டும் ரூ.62 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் கேரளாவில் ரூ.3.5 கோடி, கர்நாடகாவில் ரூ.5.5 கோடி ஆகியனவும் அடங்கும் . தெலுங்கு டப்பிங் உரிமம் ரூ.2.5 கோடிக்கும், இந்தி தியேட்டர் உரிமம் ரூ.2 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலும் அமோகம்
இதே போல் வெளிநாட்டு வெளியீட்டு உரிமம் ரூ.16 கோடிக்கும், ஆடியோ உரிமம் ரூ.4.5 கோடிக்கும், டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமம் 65 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது. வலிமை படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமத்தை ஜீ ஸ்டூடியோஸ் வாங்கி உள்ளது.

ரிலீஸிற்கு முன்பே லாபம்
ஆக மொத்தம் இன்றைய தேதியில் வலிமை படம் ரூ.161 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளது. பட்ஜெட் தொகை ரூ.150 கோடி போக ரூ.11 கோடி லாபம் கிடைத்துள்ளது. படம் ரிலீசாவதற்கு முன்பே லாபத்தை பார்த்து விட்டார்கள். இன்னும் டிக்கெட் விற்பனை இவற்றை எல்லாம் சேர்த்தால் லாபம் இன்னும் பல கோடிகளை தாண்டும்.

வசூல் சாதனை படைக்கும்
அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் என்பதால் முதல் நாள் வசூல், சமீபத்தில் வெளியான படங்களின் வசூல் சாதனையை வலிமை முறியடித்து, புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











