twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வருமான வரித்துறை ரெய்டுகள் எப்படி நடக்கிறது? பக்காவாக ஸ்கெட்ச் போடும் அதிகாரிகள்..சுவாரஸ்ய தகவல்கள்!

    |

    ஒரு வருமான வரித்துறை ரெய்டு எப்படி நடக்கிறது அதற்கு முன் அதிகாரிகள் தகவல்களை எப்படி சேகரித்து ரெய்டு நடத்துகிறார்கள் என்பதன் பின்னணியை பார்ப்போம்.

    பெரிய அளவில் வருமானம் பார்க்கும் ஒருவர் வரி ஏய்ப்பு செய்வதை எப்படி கண்டறிகிறார்கள், தகவலை எப்படி திரட்டுகிறார்கள் என்பது முக்கியம்.

    அதன் பின்னர் ரெய்டு நடப்பதற்கான ஏற்பாடுகளை ரகசியமாக செய்து ரெய்டை வெற்றிகரமாக நடத்துவது கடைசி வழி ஆகும்.

    வெற்றி நாயகன் அஜித்...துப்பாக்கி சுடுதலில் 6 பதக்கங்களை தட்டி தூக்கிய அஜித்...கொண்டாடும் ரசிகர்கள் வெற்றி நாயகன் அஜித்...துப்பாக்கி சுடுதலில் 6 பதக்கங்களை தட்டி தூக்கிய அஜித்...கொண்டாடும் ரசிகர்கள்

     ஐடி ரெய்டு எப்படி திட்டமிடப்படுகிறது?

    ஐடி ரெய்டு எப்படி திட்டமிடப்படுகிறது?

    சென்னையில் திரைத்துறை பிரபலங்கள் வீடுகளில் நடைபெற்ற ஐடி ரெய்டு குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடைகாண ஐடி ரெய்டு எப்படி திட்டமிடப்படுகிறது என்பது குறித்து பார்ப்போம். வருமான வரித்துறையினர் ரெய்டு செல்வதற்கு முன் என்னென்ன தயாரிப்புகளை செய்வார்கள், எப்படி அதற்கான ஆயத்தப் பணிகளை செய்வார்கள் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். வருமானவரித்துறை ரெய்டு என்பது திடீரென செய்யப்படுவது அல்ல என்பதை இக்கட்டுரை மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

     ரெய்டுக்கு முன் தயாரிப்பு காலம் எவ்வளவு?

    ரெய்டுக்கு முன் தயாரிப்பு காலம் எவ்வளவு?

    சென்னையில் நேற்றும், இன்றும் திரையுலகினரை சேர்ந்த பல்வேறு பிரபலங்களின் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. இன்றும் ரெய்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருமான வரித்துறை ரெய்டு எப்படி நடக்கிறது? எப்படியெல்லாம் திட்டமிடுகிறார்கள்? ஒரு நாள், ஒரு வாரத்தில் எடுக்கின்ற நடவடிக்கையா என பல்வேறு சந்தேகங்கள் அனைவருக்கும் எழும் அதுகுறித்து நாம் இப்பொழுது பார்ப்போம்.

     ரெய்டுக்கு பின் உள்ள விவகாரங்களை முன்னாள் அதிகாரிகள் சொல்ல கேட்போம்

    ரெய்டுக்கு பின் உள்ள விவகாரங்களை முன்னாள் அதிகாரிகள் சொல்ல கேட்போம்

    வருமானவரித்துறை ரெய்டு என்பது காலையில் தூங்கி எழுந்த நமக்கு அதிகாலையில் கேள்விப்படும் ஒரு செய்தி என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் இதற்குப் பின் பல்வேறு விஷயங்கள் இருப்பதை நாம் அறிந்திருக்க முடியாது, வாய்ப்பில்லை. இதுகுறித்து ஐடி துறையில் பணியாற்றி ஓய்வுப்பெற்ற முன்னாள் அதிகாரிகள் சிலரிடம் எவ்வாறு ரெய்டு திட்டமிடப்படுகிறது என்பது குறித்த கேள்விகளை வைத்த பொழுது அவர்கள் சொன்ன கருத்தின் அடிப்படையில் இந்த பதிவு.

     வருமான வரித்துறை செயல்பாடு

    வருமான வரித்துறை செயல்பாடு

    இந்தியாவில் அதிக வருமானம் அதிகம் உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை வரியாக அரசுக்கு செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறை வருமானவரித்துறை. இதற்காக சிவில் பணியில் ஐஆர்எஸ் தேர்வான அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். இது தவிர குரூப்-1 பணிகள் மூலமும் குரூப்-2 போன்ற பணிகள் மூலமும் வருமான வரித்துறைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது தனியாக இயங்கும் ஒரு துறையாகும். இந்தத் துறை இன்று மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து நவீன விஷயங்களை கிரகித்து வளர்ந்து வருகிறது.

     எது வரி ஏய்ப்பு? ஏன் வருமான வரித்துறை ரெய்டுக்கு வருகிறது?

    எது வரி ஏய்ப்பு? ஏன் வருமான வரித்துறை ரெய்டுக்கு வருகிறது?

    ஒருவரின் வருமானத்தை அவர் வரி ஏய்ப்பு செய்வதை, நவீனமான முறையில் அவர் வரி ஏய்ப்பு செய்தாலும் இன்றுள்ள டெக்னாலஜி மூலம் அதை கண்டுபிடித்து அதை தடுக்கும் வேலையும் செய்கின்றனர். ஒரு மிகப்பெரிய செல்வந்தர் அல்லது மிகப்பெரிய திரைத்துறை சம்பந்தப்பட்ட பிரபலம், விளையாட்டுத்துறை சம்பந்தபட்டவர் தொழிலில் வரும் வரவு ஒரு கட்டத்திற்கு மேல் மிதமிஞ்சி போகும். அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர், அவர் நடத்தும் நிறுவனம் அல்லது தொழில் மூலம் வரும் வருமானத்தை குறைத்துக்காட்டி அரசுக்கு தெரியாமல் வரி கட்டாமல் மறைக்க முயற்சிக்கிறார் என்று வைத்துக் கொண்டால் அது கருப்பு பணமாக மாறுகிறது இதை அவர் வருமானமாக காட்டாமல் மறைப்பதன் மூலம் வரிஏய்ப்பு செய்கிறார் என்பது தெளிவாகிறது.

     வரி ஏய்ப்பை எப்படி கண்காணிக்கிறார்கள்? கணக்கிடுகிறார்கள்

    வரி ஏய்ப்பை எப்படி கண்காணிக்கிறார்கள்? கணக்கிடுகிறார்கள்

    கோடிக்கணக்கில் பணம் புரளும் போது அவர் அதை ஏதாவது ஒரு வகையில் மறைத்து வரி ஏய்ப்பு செய்கிறார் என்றால் வருமானவரித்துறை இந்த விஷயத்தை எப்படி கணக்கிடுகிறார்கள், கண்டுபிடிக்கிறார்கள் என்பதை பார்ப்போம். நவீன உலகில் நமது ஒவ்வொரு வங்கிப் பரிமாற்றம், பணப்பரிமாற்றம், மற்ற பரிமாற்றங்கள், சொத்து பதிவுகள் உள்ளிட்ட பணப்பரிவர்த்தனைகளும் விவரங்களும் ஆதார் இணைக்கப்பட்ட பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

     கருப்புப் பணப்பரிமாற்றம்

    கருப்புப் பணப்பரிமாற்றம்

    எந்த ஒரு விஷயமும் இதன் மூலம் வருமான வரி துறையின் கவனத்திற்குச் செல்லாமல் தப்பமுடியாது. இதையும் மீறி ஒருவரிடம் உள்ள கருப்பு பணம் இன்னொருவருக்கு கருப்பு பணமாகவே கை மாறினால் அதை கண்டுபிடிப்பது சிரமம். வருமானம் அதிகமாக இருந்து அதை குறைத்து காண்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் கண்டுபிடிப்பது சிரமம் தான் என்றாலும் இதை எவ்வாறு கண்டுபிடிக்கிறார்கள் என்பதை பார்த்தால் பிரமித்துத்தான் போவோம்.

     உங்கள் வருமானத்தை மறைத்து ஏய்க்க முடியாது.. எளிதாக கண்காணிக்கப்படும்

    உங்கள் வருமானத்தை மறைத்து ஏய்க்க முடியாது.. எளிதாக கண்காணிக்கப்படும்

    அனைத்து வருமானங்களையும் வருமானவரித்துறை 100% கணக்கிட்டு அல்லது அனைத்து நபர்களின் வருமானத்தின் முழு விவரத்தையும் வருமான வரித்துறை 100% கணக்கிட்டு கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது இயலாத காரியம். ஆனால் வருமானவரித்துறை ஒருவரை கண்காணிக்க தொடங்கி விட்டது என்றால் அவர் 1% கூட தப்ப முடியாது. சம்பந்தப்பட்ட நபர் என்னென்ன செய்வார் என்பதையும், அவரது நடவடிக்கைகள் மட்டும் அல்லாது அவர் சார்ந்த அனைத்து நபர்களின் விவரங்களையும் தோண்டி எடுத்து விடுவார்கள்.

     ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ திட்டமிடப்படுவது அல்ல ரெய்டு

    ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ திட்டமிடப்படுவது அல்ல ரெய்டு

    நேற்றுமுதல் திரையுலக பிரபலங்களின் வீடுகளில் நடந்த ரெய்டு போன வாரமோ, ஒரு மாதம் முன்போ திட்டமிடுவது அல்ல இது ஒரு நீண்டகால பிராசஸ் ஆகும். முதலில் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித் துறைக்கு கிடைக்கும் தகவல்கள் (அதை சோர்ஸ் என சொல்வார்கள்) புகார்கள், இது சம்பந்தப்பட்டவருக்கு தெரிந்த நபர்கள் மூலமாகவோ, அல்லது சம்பந்தப்பட்ட நபரை பிடிக்காதவர்கள் அவர் குறித்த தகவலை ஏதோ ஒரு வகையில் வருமான வரித்துறைக்கு தெரிவிப்பார்கள், சில நேரம் வருமான வரித்துறைக்கு உள்ள இன்பார்மர் மூலமாகவோ தகவல் கிடைக்கும்.

     உடனடியாக நடப்பதல்ல ரெய்டு..தகவல் சரிபார்ப்பு நடக்கும்

    உடனடியாக நடப்பதல்ல ரெய்டு..தகவல் சரிபார்ப்பு நடக்கும்

    இந்த தகவல்களை வருமான வரித்துறை சேகரித்து நம்பகத்தன்மை குறித்து ஆராய்வார்கள். சில நேரம் சம்பந்தப்பட்ட நபரின் வருமானம் பொதுவெளியிலோ அல்லது அவர் சார்ந்த ஆட்கள் மூலமோ தெரியவரும். ஆனால் அவர் தாக்கல் செய்யும் ஐடி ரிட்டர்னில் குறைத்து காட்டியிருப்பார். அப்போதும் அதிகாரிகள் கண்காணிக்க தொடங்குவார்கள். இது அல்லாமல் வேறொரு ரெய்டில் சிக்கும் ஒருவர் அவர் சம்பந்தப்பட்டது மட்டுமல்லாமல் அவருடன் நிதிபரிமாற்றத்தில் இருக்கும் வேறொரு நபரும் சிக்கும்போது அது ஒரு செயின் ரியாக்‌ஷன் போல் தொடரும். அவரையும் கண்காணிக்கத் துவங்குவார்கள்.

     கண்காணிப்பு என்றால் என்ன? சோர்ஸ் எப்படி வருகிறது?

    கண்காணிப்பு என்றால் என்ன? சோர்ஸ் எப்படி வருகிறது?

    சரி கண்காணிக்க தொடங்கிவிட்டார்கள் கண்காணிப்பு என்றால் என்ன? அதைப் பார்ப்போம். ஒரு எக்ஸ் மீது வரி ஏய்ப்பு புகார் வருகிறது, அவர் திறமையாக அதை மறைத்துள்ளார் என்றால் அது உறுதியானால் கண்காணிப்பு ஆரம்பமாகும். இதற்காக அவரது வங்கி கணக்குகள் அத்தனையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுவிடும். அவரது கிரெடிட், டெபிட் கார்டுகள் பரிவர்த்தனைகள் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துவிடும். போன்கால்கள், மெயில் மற்றும் அவர் பயன்படுத்தும் நவீன பரிமாற்றங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.

     உங்களின் அனைத்து ரகசியங்களும் வெளியில் எடுக்கப்படும்

    உங்களின் அனைத்து ரகசியங்களும் வெளியில் எடுக்கப்படும்

    அவரது நிறுவனம் அதன் பார்ட்னர்கள், சினிமாத்துறையாக இருந்தால் அவர் எதிலெல்லாம் முதலீடு செய்கிறார், அவருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், அலுவலகம் சார்ந்து நெருக்கமாக இருப்பவர்கள் குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படும். அவர்களின் போன்கால்கள், மெயில் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படும். இதில் ரகசியம் என்று இன்று எதுவும் இல்லை. அப்படி நினைத்துக்கொள்ளலாம். இதற்கு சிறிய உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் ஒரு பிரபல நடிகர் பணப்பரிவர்த்தனை குறித்து வாட்ஸ் ஆப்-ல் தகவல் அனுப்பினால் ரகசியமாக இருக்கும் யாரும் கண்காணிக்க முடியாது சம்பந்தப்பட்ட நண்பருக்கு தகவல் அனுப்பினார். ஆனால் அதையும் எடுத்து நடவடிக்கை எடுத்தது வருமான வரித்துறை.

     கண்காணிப்பதில் உள்ள சூட்சமம்

    கண்காணிப்பதில் உள்ள சூட்சமம்

    கண்காணிக்க தொடங்குவது என்பது பெரிய ப்ராசஸ் இதற்கு பல மாதங்கள் பிடிக்கும். அதனால் தான் வருமான வரித்துறை ரெய்டு என்பது ஒரு நாள், ஒரு வாரத்தில் முடிவு செய்வதல்ல என சொல்லப்படுகிறது. சேகரிக்கப்பட்ட தகவல்கள் சரி பார்க்கப்படும். அதன் மூலம் உண்மையிலேயே சம்பந்தப்பட்ட நபர் வரி ஏய்ப்பு செய்துள்ளார், ரொக்கப்பணம் இந்த விலாசத்தில் உள்ளது அல்லது தனக்கு தெரிந்தவர் வீட்டில் பதுக்கி வைத்துள்ளார், தனது நிறுவனத்தில் பணியாற்றுபவர் வீட்டில் பதுக்கி வைத்துள்ளார் என்பது போன்ற தகவல்களை திரட்டுவார்கள்.

     அனைத்து தகவல்களும் சேகரித்து பட்டியலிடப்படும்

    அனைத்து தகவல்களும் சேகரித்து பட்டியலிடப்படும்

    இது தெரியாமல் சிலர் சாமர்த்தியமாக நடப்பதாக நினைத்து தூரத்து உறவினர் பெயரில் சொத்து வாங்குவது, தெரிந்தவர் வீட்டில் பணம் நகைகளை பதுக்குவது, சம்பந்தமே இல்லாத கட்டடத்தில் பணம், நகைகளை பதுக்கிவைப்பார்கள். இவைகள் ஏதோ ஒரு போன் கால், மெயில் அல்லது தகவல் பரிமாற்றம் மூலம் எளிதாக எடுக்கப்படும். பின்னர் அனைத்து விலாசங்கள் பட்டியலிடப்படும். எங்கு பணம், நகை சொத்து ஆவணங்கள் பதுக்கப்பட்டுள்ளது என்கிற பட்டியல் அனைத்தையும் சேகரிப்பார்கள். அனைத்து விலாசங்களும் பட்டியலிட்டப்பின் ரெய்டுக்கான தேதி குறிக்கப்படும்.

     அனைத்தையும் தீர்மானிப்பது உயர் அதிகாரிகள் மட்டுமே

    அனைத்தையும் தீர்மானிப்பது உயர் அதிகாரிகள் மட்டுமே

    இதுவரை நடக்கும் நிகழ்வுகள் அனைத்து பெரிய அதிகாரி, குறிப்பிட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் நடக்கும். தகவல் எடுப்பவருக்கு யாருக்கான தகவல் எடுக்கப்படுகிறது, ரெய்டு போகுமா? போகாதா? எந்த தேதியில் ரெய்டு, எங்கெங்கு ரெய்டு என்கிற எந்த விவரமும் கீழே உள்ள அதிகாரிகளுக்கே தெரியாது. சிறிய அளவில் கூட எதுவும் கசியாமல் நேர்த்தியாக அனைத்தும் திட்டமிடப்படும். ரெய்டு நடக்கும்போது சம்பந்தப்பட்டவர் வீடு அலுவலகம் மட்டுமல்லாமல் அவர் சம்பந்தப்பட்ட உறவினர்கள், நண்பர்கள், தொழில் பார்ட்னர்கள், பினாமிகள் சம்பந்தப்பட்ட இடங்களையும் ஒரே நேரத்தில் ரெய்டு செய்வார்கள்.

     அனைத்தும் பரம ரகசியம்

    அனைத்தும் பரம ரகசியம்

    ரெய்டு தேதி, நேரம் ( எப்போதும் அதிகாலையாகவே இருக்கும்) உள்ளிட்டவை மேல்மட்ட அளவில் மட்டுமே பேசி ரகசியமாக வைக்கப்படும். இதன் காரணம் என்னவென்றால் இந்த தகவல் கீழே உள்ளவர்களுக்கு பரவினால் வெளியே கசிந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்து விட வாய்ப்புண்டு என்பதால் மிக சிலருக்கு மட்டுமே இந்த தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படும். மிகச் சிலர் மட்டுமே இந்த திட்டங்களை செயல்படுத்தும் முனைப்பில் இருப்பார்கள். பிறகு கீழ்மட்ட அளவில் அதற்கான ஏற்பாடுகள் பிரிக்கப்படும் 10 இடங்களுக்குப் போவது என்றால் பத்து இடங்களுக்கான ஸ்குவாட் பிரிக்கப்படும். பின்னர் 10 இடங்கள் குறித்த முழு தகவல்களும் எத்தனை மணிக்கு ரெய்டு என்பதும் முடிவெடுக்கப்படும்.

     வாகனம் பிடிப்பதில் கூட உஷார் தன்மை

    வாகனம் பிடிப்பதில் கூட உஷார் தன்மை

    ரெய்டு போகும்போது வாடகைக்கு வாகனங்களை பிடிப்பார்கள் (அலுவலக வாகனம் என்றால் அலுவலக ஓட்டுநர் எவரேனும் தகவலை கையவிட வாய்ப்புண்டு என்பதால் தவிர்த்து விடுவார்கள்). கார்கள் மொத்தமாக அலுவலகத்துக்கு இரவே வந்து நிற்கும், ரெய்டு போகும் ஸ்குவாடை அதிகாலையில் வரச்சொல்லி விடுவார்கள். பின்னர் ரெய்டு போகும் நேரத்திற்கு சற்று முன் போகும் இடத்திற்கான முகவரியை சம்பந்தப்பட்ட ஸ்குவாட் லீடரிடம் அளித்து அங்கு போகச் சொல்வார்கள். அவர் நேராக குறித்த நேரத்திற்குள் குழுவுடன் அங்கு போய்விட வேண்டும்.

     ரெய்டு நடக்கும் விதம் இப்படித்தான்

    ரெய்டு நடக்கும் விதம் இப்படித்தான்

    ஒரே நேரத்தில் அனைத்து இடங்களுக்கும் சென்று சேரும் வகையில் திட்டமிடப்படும். அனைவரும் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று ரெய்டை தொடங்குவார்கள். அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு அங்குள்ளவர்கள் முன்னிலையில் வீட்டை அக்குவேறு ஆணிவேறாக சல்லடை செய்து அனைத்தையும் கைப்பற்றுவார்கள். பின்னர் அவைகள் பணமாக, நகையாக, ஆவணங்களாக, சொத்து பத்திரங்கள், லேப்டாப், ஹார்ட் டிஸ்க் என அனைத்தும் பட்டியலிடப்பட்டு கையொப்பம் பெற்று எடுத்துச் செல்வார்கள். இதற்காக வருமான வரித்துறை சம்பந்தப்படாத ஒரு துறையின் உயர் அதிகாரியையும் உடன் சாட்சிக்காக அழைத்துச் செல்வார்கள். இவ்வாறு ரெய்டு நடக்கும்போது போலீஸை பாதுகாப்புக்கு அழைப்பது உண்டு. சில நேரம் சிஆர்பிஎஃப் பாதுகாப்பும் இருக்கும்.

     ரெய்டுக்குப்பின் என்ன செய்கிறார்கள்?

    ரெய்டுக்குப்பின் என்ன செய்கிறார்கள்?

    கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகைகள், பணம் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு அவைகளை ஆவணப்படுத்தி அலுவலகத்தில் வைத்து அவர் தாக்கல் செய்த ஐடி ரிட்டர்னுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். அதில் முறைகேடு நடந்ததாக தெரிந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் கொடுத்து அழைத்து விசாரணை நடத்துவார்கள். கைப்பற்றப்பட்ட அனைத்துக்கும் முறையான ஆவணம் இருந்தால் திரும்ப ஒப்படைக்கப்படும். வரி ஏய்ப்பு இருந்தால் அபராதமும் உண்டு. வேறு வில்லங்கம் இருந்தால் அமலாக்கத்துறைக்கு போகவும் வாய்ப்புண்டு.

     நடைமுறைப்பற்றிய பதிவு மட்டுமே அரசியல் இல்லை

    நடைமுறைப்பற்றிய பதிவு மட்டுமே அரசியல் இல்லை

    இதுதான் நடைமுறை. பல விஷயங்கள் வெளிப்படையாக சொல்ல முடியாதது இங்கு பதிவு செய்யப்படவில்லை. இவையெல்லாம் இருந்தும் பலரும் கண்ணுக்கெதிரே கோடிக்கணக்கில் சம்பாதித்து எந்த பிரச்சினையும் இன்றி உலாவுகிறார்களே என்று கேட்கலாம். அது இதற்கெல்லாம் அப்பாற்பட்ட அரசியல். இந்த கட்டுரையின் நோக்கம் ரெய்டு எவ்வாறு திட்டமிடப்படுகிறது. அதிகாரிகள் அதற்காக எவ்வளவு மெனக்கிடுகிறார்கள், ரகசியம் காத்து கச்சிதமாக காரியத்தை முடிக்கிறார்கள் என்பதன் நடைமுறைப்பற்றிய ஒரு பதிவு மட்டுமே.

    English summary
    Let's look at the background of how an Income Tax raid happens and how the authorities collect information before the raid.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X