»   »  நயன்தாராவாக இருப்பது அவ்வளவு ஈஸி இல்லை: விக்னேஷ் சிவன்

நயன்தாராவாக இருப்பது அவ்வளவு ஈஸி இல்லை: விக்னேஷ் சிவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் தினத்தை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

மகளிர் தினம் எல்லாம் கொண்டாடுகிறார்கள் ஆனால் நாங்கள் ஆண்கள் தினம் என்று என்றே தெரியாமல் உள்ளோம் என பல ஆண்கள் அலுத்துக் கொள்கிறார்கள்.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலியும், நடிகையுமான நயன்தாராவுக்கு ட்விட்டர் மூலம் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் நயன்தாராவை புகழ்ந்து எழுதியுள்ளார்.

போராளி

போராளி

அழகான போராளி! அத்தனை வலிகள், தோல்விகளுக்கு மத்தியில்...இதுவரை வந்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்! மெக்சிகோவில் ஏதாவது பிரச்சனை என்றால் கூட மக்கள் உங்களின் பெயரை அதில் இழுத்தாலும் கூட சிரித்துக் கொண்டே செல்கிறீர்கள்! என விக்கி ட்வீட்டியுள்ளார்.

நயன்தாரா

வலுவாக, நம்பிக்கையுடன், நல்லதையே நினைப்பது...நயன்தாராவாக இருப்பது அவ்வளவு எளிது அல்ல. நான் சந்தித்த பெண்களில் மிகவும் வலிமையான மற்றும் அழகான பெண்ணுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் என விக்கி தெரிவித்துள்ளார்.

காதல்

காதல்

விக்கிக்கும், நயன்தாராவுக்கும் இடையே லைட்டா பிரச்சனை என்று கூறப்பட்டது. இந்நிலையில் விக்கி நச்சுன்னு ஒரு காதல் சாரி மகளிர் தின வாழ்த்து கூறி நயன்தாராவை கவுத்திட்டார்.

English summary
Director Vignesh Shivan has wished his girlfriend Nayanthara in a most romantic way on women's day.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil