டிரெண்டிங்கில் இருப்பது புஷ்பா பாட்டு தான்...ஆனா ஊம் சொல்றியா மாமா இல்லையாமே

சென்னை : இந்திய அளவில் வசூல் சாதனை படைத்துள்ள புஷ்பா படத்தில் வரும் பாடல் தான் இந்திய அளவில் டிரெண்டிங்காக இருந்து வருகிறது. ஆனால் அது நீங்கள் நினைப்பது போல் சமந்தா ஆடிய ஊம் சொல்றியா மாமா பாடல் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த படம் புஷ்பா: தி ரைஸ் படம். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டு, வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதில் சமந்தா ஆடிய அயிட்டம் சாங்கான ஊம் சொல்றியா மாமா பாடல் செம ஹிட் ஆனது.

இந்த பாடல் தான் டிரெண்டிங்கா

இந்த பாடல் தான் டிரெண்டிங்கா

இருந்தாலும் அதை விட செம ஹிட் ஆனது ஸ்ரீவல்லி பாடல் தானாம். இந்த பாடல் தான் இந்திய அளவில் செம டிரெண்டிங் ஆகி உள்ளது. மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு பிறகு இந்த பாடலுக்கு ஸ்டெப் போடாத பிரபலங்களே இல்லை என சொல்லும் அளவிற்கு பலரும் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து விட்டனர்.

இவர் தான் காரணமா

இவர் தான் காரணமா

இந்தியா முழுவதும் டிரெண்டிங் ஆகியுள்ள சார்ட்பஸ்டர் ஹிட் பாடலான 'ஶ்ரீவல்லி' பாடலின் பின்னால் இருக்கும் உண்மையான நாயகன் - இந்திய திரையுலகின் பன்முக நாயகன், மியூசிகல் ராக்ஸ்டார், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் தான். புஷ்பா படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ஹிட்டாக இவரின் இசை தான் முக்கிய காரணம்.

சார்ட்பஸ்டர் ட்யூன்கள்

சார்ட்பஸ்டர் ட்யூன்கள்

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ஒவ்வொரு ஆல்பத்திலும், கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் தவற விடாமல் சார்ட்பஸ்டர் ட்யூன்களைத் தொடர்ந்து தருவதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததே. தேவி ஸ்ரீ பிரசாத்தின் சமீபத்திய ஆல்பமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் ஸ்ரீவல்லி, ஓ போலேகா யா ஓ ஓ ஓ போலேகா மற்றும் சாமி சாமி ஆகிய பாடல்கள் இந்திய திரை இசை உலகையே பெரும் சலசலப்புக்கு உள்ளாக்கியது. சமூக வலைதளங்களில் இப்பாடல்கள் மில்லியன் கணக்கான ரீல்கள், பார்வைகள் மற்றும் விருப்பங்களை கடந்து சாதனைகள் படைத்து வருகிறது.

திரும்பிய பக்கமெல்லாம் சாதனை

திரும்பிய பக்கமெல்லாம் சாதனை

தேவி ஶ்ரீ பிரசாத்தின் தொடர்ச்சியான வெற்றிகரமான ஆல்பங்கள், டி எஸ் பி எனும் பிராண்டாக அவருக்கென ஒரு தனித்த இடத்தை இந்திய அளவில் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் 'புஷ்பா - தி ரைஸ்' படத்தின் வெற்றிகரமான சார்ட்பஸ்டர் பாடல்கள், இந்திய இசை அரங்கில் மறுக்கமுடியாத வகையில் வெளியான ஒவ்வொரு மொழியிலும் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த ஆல்பத்தின் வெற்றியானது இசை தளங்களில் மட்டும் நின்றுவிடாமல், சமூக ஊடக ரீல்களின் விருப்பமிகு தேர்வாகவும் மாறியுள்ளது. அங்கு ரசிகர்கள் அதிக உற்சாகத்துடன் இந்த ஆல்பத்தை கொண்டாடி வருகின்றனர்.

வெற்றிக்கு இவங்க தான் காரணம்

வெற்றிக்கு இவங்க தான் காரணம்

இது குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறுகையில், "புஷ்பா - தி ரைஸ் என் இசை பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தில் இசையில் எனது புதிய அணுகுமுறையை நம்பியதற்காக சுகுமார் சார், ஐகான்ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் மைத்ரி மூவிஸ் நிறுவனத்திற்கு நன்றி. பின்னணிப் பாடகர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் நடிகர்களின் மாயாஜால திரை ஆளுமை எல்லாம் தான் இந்த வெற்றிக்கு ஆதாரமாக அமைந்தது. எனது இசைக்காக அன்பையும் ஆசீர்வாதத்தையும் என் மீது பொழிந்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி. எனது வாழ்க்கை முழுவதும் உங்களிடமிருந்து இதே அளவு ஆதரவைப் பெறுவேன் என்று நம்புகிறேன் என்றார்.

Recommended Video

ஷிவானி காலுக்கு என்ன ஆச்சு? இப்படி நடக்குறாரே என கலாய்க்கும் நெட்டிசன்கள்.. எல்லாம் புஷ்பா ஃபீவர்!
 குவியும் பாலிவுட் வாய்ப்புகள்

குவியும் பாலிவுட் வாய்ப்புகள்

தற்போது தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு பாலிவுட்டில் உள்ள பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து எண்ணற்ற வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. டிஎஸ்பி ஏற்கனவே தமிழ், தெலுங்கு, பாலிவுட் மற்றும் சில தனி ஆல்பம் சிங்கிள்களில் மிகவும் பிஸியாக இயங்கி கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X