»   »  பிரபல மாடல் அழகி மரண வழக்கில் பெங்காலி நடிகர் விக்ரம் கைது

பிரபல மாடல் அழகி மரண வழக்கில் பெங்காலி நடிகர் விக்ரம் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், மாடலுமான சோனிகா சவுகான் மரணம் தொடர்பாக டிவி நடிகர் விக்ரம் சாட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், மாடலுமான சோனிகா சவுகான், டிவி நடிகர் விக்ரம் சாட்டர்ஜி ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி இரவு 3.30 மணிக்கு காரில் சென்றனர். அந்த கார் விபத்துக்குள்ளானதில் சோனிகா உயிர் இழந்தார், விக்ரம் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

விக்ரம் குடித்துவிட்டு காரை ஓட்டி தனது மகளை கொன்றுவிட்டதாக சோனிகாவின் பெற்றோர் தெரிவித்தனர்.

விக்ரம்

விக்ரம்

விபத்து நடந்த அன்று நான் குடிக்கவே இல்லை என்று விக்ரம் சாதித்தார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்று சம்பவம் நடந்த அன்று விக்ரம் மது அருந்தியதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்து வெளியிட்டது.

குடி

குடி

விபத்து நடந்த இரவு விக்ரமும், சோனிகாவும் இரண்டு கிளப்புகளுக்கு சென்றுள்ளனர். அங்கு விக்ரம் குடித்த போது எடுத்த புகைப்படங்களும், வீடியோவும் வெளியானது.

வழக்கு

வழக்கு

விக்ரம் குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டியதாலேயே விபத்து ஏற்பட்டு சோனிகா இறந்துவிட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கைது

கைது

கொல்கத்தாவில் உள்ள அக்ரோபோலிஸ் மாலுக்கு வெளியே வைத்து நேற்று இரவு விக்ரம் சாட்டர்ஜியை போலீசார் கைது செய்தனர். தங்கள் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சோனிகாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Read more about: model arrest கைது
English summary
Actor Vikram Chatterjee who is facing a culpable homicide charge for the car crash in which model and TV anchor Sonika Chauhan was killed has been arrested, police said on Friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil