கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி மீது பாய்ந்த மற்றொரு வழக்கு… தீவிரமாக விசாரிக்கும் போலீஸ் !
பெங்களூர் : நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி மீது ஓலா கார் ஓட்டுநர் புகார் அளித்துள்ளார்.
டாக்ஸியில் ஏசியை ஆன் செய்யாததால் தன்னை தரக்குறைவாக பேசியதாக அந்த புகார் மனுவில் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள, ராஜராஜேஸ்வரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாக்ஸியில் ஏறினார்
கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி தோக்மலூர் அருகே செவ்வாய்க்கிழமை காலை எனது டாக்ஸியில் ஏறினார். அவர் உட்கார்ந்ததும் ஏசியை போட சொன்னார். அரசாங்கத்தின் கொரோனா வழிகாட்டுதலை கூறி ஏசி இயக்க மறுத்துவிட்டேன். இருந்தாலும், ஏர் கண்டிஷனரை ஆன் செய்ய வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வலியுத்தினார், இதையடுத்து, ஏசியை லெவல் 1 ல் வைத்தேன்.

மிரட்டினார்
இருப்பினும் சஞ்சனா ஏசியின் அளவை அதிகரிக்கும்படி கூறிவிட்டு, தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினார். மேலும், என் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்துவிடுவதாகவும், சமூக வலைத்தளத்தில் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாகவும் மிரட்டினார். இந்த விவகாரம் குறித்து நான் கர்நாடக ஓட்டுநர் கூட்டமைப்பில் புகார் அளித்துள்ளேன் என்று கூறினார்.

தரக்குறைவாக பேசவில்லை
அதில், நான் காரில் ஏறியதும் ஏசியை இயக்க சொன்னேன். ஆனால், அவர் ஏசியை இயக்க மாட்டேன் என்று கூறினார், அவர் பார்ப்பதற்கு முரட்டுத்தனமாகவும் கடுமையாகவும் இருந்தார். மேலும், அந்த ஓட்டுநர் கொரோனா தடுப்பு விதிகள் பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை என்றார். நான் அவரை தரக்குறைவான எந்தவார்த்தையையும் பயன்படுத்தி பேசவில்லை என்றார்.

விசாரணை
நான் ஒரு வண்டி ஓட்டுநருக்கு சவால் விடலாமா? நான் அவ்வளவு கீழிறங்க மாட்டேன். மொத்தபணத்தையும் பெற்றுக்கொண்டு படப்பிடிப்பு நடந்த இடத்திலிருந்த 50 மீட்டர் தொலைவில் எங்களை இறக்கி விட்டார். இதுவே அவரது தாய் அல்லது சகோதரி என்றால் அவ்வாறு செய்து இருப்பாரா. நான் போலீசை அழைத்த பிறகுதான் எங்களை சரியான முகவரியில் இறக்கி விட்டார் என்று கூறினார். இது குறித்து ராஜராஜேஸ்வரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை பொருள் வழக்கில்
கடந்த சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வழங்கியதாக அவரது நெருங்கிய தோழியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்ட போது, சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங் என பலரிடம் விசாரணை நீண்டது. அது கன்னட திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில், நிமிர்ந்து நில் படத்தில் நடித்த ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.


Click it and Unblock the Notifications











