»   »  எங்களை பார்த்தா எப்படி தெரியுது?: நடிகர், மனைவியை எச்சரித்த ஜட்ஜய்யா

எங்களை பார்த்தா எப்படி தெரியுது?: நடிகர், மனைவியை எச்சரித்த ஜட்ஜய்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கன்னட நடிகர் சுதீப் மற்றும் அவரின் மனைவி பிரியாவை பெங்களூர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் தனது மனைவி பிரியாவை பிரிய விவாகரத்து கோரி பெங்களூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்ததோடு சரி அதன் பிறகு சுதீப், பிரியா நீதிமன்றத்தில் ஆஜராகவே இல்லை.

இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுதும் சம்பந்தப்பட்டவர்கள் ஆஜராகவில்லை.

விசாரணை

விசாரணை

விவாகரத்து வழக்கு இதுவரை 9 முறை விசாரணைக்கு வந்துவிட்டது. 9 முறையும் சுதீப் மற்றும் பிரியா ஆஜராகவில்லை. மாறாக அவர்களின் வழக்கறிஞர்கள் ஆஜராகி ஏதாவது காரணம் சொல்லி வருகிறார்கள்.

நீதிபதி

நீதிபதி

சுதீப், பிரியாவின் நடவடிக்கையால் கடுப்பான நீதிபதி அடுத்த விசாரணையின்போது அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

சுதீப்

சுதீப்

சுதீப்பும், பிரியாவும் ஏதோ சண்டை போட்ட வேகத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார்களாம். தற்போது அதை உணர்ந்து சேர்ந்து வாழ விரும்புகிறார்களாம். அதனால் தான் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் உள்ளார்களாம்.

வில்லன்

வில்லன்

சுதீப் தான் நடித்து வரும் வில்லன் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவர் நாடு திரும்பியதும் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

English summary
The family court of Bengaluru has given a final chance to Sudeep and Priya to appear before the court, regarding the application of divorce.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil