»   »  12வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம் இசைக் கலைஞர்: பிரபலங்கள் அதிர்ச்சி

12வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம் இசைக் கலைஞர்: பிரபலங்கள் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil
12வது மாடியில் இருந்து குதித்து இசைக் கலைஞர் தற்கொலை

மும்பை: பெங்களூரை சேர்ந்த இசைக் கலைஞர் கரண் ஜோசப் 12வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரை சேர்ந்தவர் பியானோ இசைக் கலைஞரான கரண் ஜோசப்(29). 5 வயதில் இருந்து பியானோ வாசித்து வந்தார். அவர் பெங்களூர் ஸ்கூல் ஆப் மியூசிக், ராயல் ஸ்கூல் ஆப் மியூசிக், ட்ரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக், அமெரிக்காவில் உள்ள பெர்க்லீ காலேஜ் ஆப் மியூசிக்கில் இசை பயின்றவர்.

பிரபல இசை ஜாம்பவான்களிடம் இசை கற்றவர்.

மும்பை

மும்பை

இசை துறையில் மேலும் சாதிக்க மும்பை சென்றார் கரண். தனது நண்பர் ரிஷி ஷாவுடன் சேர்ந்து மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள கன்கார்ட் அடுக்குடுமாடி குடியிருப்பில் கடந்த ஒரு மாதமாக வசித்து வந்தார்.

தற்கொலை

சனிக்கிழமை காலை நண்பர்களுடன் சேர்ந்து டிவி பார்த்துள்ளார் கரண். திடீர் என்று அவர் ஜன்னல் அருகே சென்று கீழே குதித்துவிட்டார். உடனே அவரது நண்பர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மரணம்

மரணம்

கரணை உடனே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் எதற்காக இந்த முடிவு எடுத்தார் என தெரியவில்லை.

போலீஸ்

கரணின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கரண் பிரபல பாடகர் விஷால் டட்லானியின் இசைக்குழுவில் பணியாற்றுள்ளார். கரணின் மரணம் குறித்து அறிந்த விஷால் அதிர்ச்சி அடைந்துள்ளார். கரண் ஒரு ஜீனியஸ் என்று தெரிவித்துள்ளார் விஷால்.

இரங்கல்

கரண் ஜோசபின் மரணம் குறித்து அறிந்த இசைத் துறையினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். மேட் ஃபிங்கர்ஸ் இசைக்குழுவில் பணியாற்றிய கரண் ஒரு மேதை என்கிறார்கள்.

நண்பர்

நண்பர்

கரண் சனிக்கிழமை காலை 5. 40 மணிக்கு தன்னை அடித்து நொறுக்குகிறார்கள் என்றும், தன்னை காப்பாற்றுமாறும் நண்பர் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.

English summary
A pianist from Bengaluru jumped to death from a highrise building in suburban Bandra on Saturday morning, police said. The deceased has been identified as 29-year old Karan Joseph, a well-known name in the Indie music world, said Mumbai Police spokesperson and Deputy Commissioner of Police (DCP) Rashmi Karandikar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil