»   »  செம ஆதரவு பெற்ற விஜய் சேதுபதி... சிறந்த நடிகர் 2017 #BestOfTamilCinema2017 #FilmibeatPolls

செம ஆதரவு பெற்ற விஜய் சேதுபதி... சிறந்த நடிகர் 2017 #BestOfTamilCinema2017 #FilmibeatPolls

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கடந்த ஆண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய உச்ச நட்சத்திரங்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. விஜய் நடிப்பில் இரண்டு படங்களும், அஜித் நடிப்பில் ஒரு படமும் வெளியானது.

தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தன.

வளர்ந்து வரும் நடிகர்களை கௌரவிக்கும் விதமாக நமது தளத்தின் சிறந்த நடிகர்களுக்கான போட்டியில் விஜய், அஜித் ஆகியோர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

கருத்துக்கணிப்பு

கருத்துக்கணிப்பு

கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ், விஜய் சேதுபதி, விதார்த், கார்த்தி, மாதவன் ஆகியோர் கருத்துக்கணிப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்களைக் கவர்ந்த நடிகர்களுக்கு வாக்களித்து ஆதரவு அளித்தனர். வாசகர்களின் வாக்குகளின்படி கடந்த ஆண்டின் சிறந்த நடிகராக விஜய் சேதுபதி தேர்வாகிறார்.

சிறந்த நடிகர் 2017

சிறந்த நடிகர் 2017

76.21% வாசகர்களின் ஆதரவைப் பெற்று 2017-ம் ஆண்டின் சிறந்த நடிகராக தேர்வாகி இருக்கிறார் விஜய் சேதுபதி. கடந்த ஆண்டில் 'விக்ரம் வேதா', 'புரியாத புதிர்' உட்பட விஜய் சேதுபதி நடித்து ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகின. 'விக்ரம் வேதா' படத்தில் வேதாவாக மிரட்டிய விஜய் சேதுபதி, தனது யதார்த்தமான, கெத்தான மேனரிச நடிப்பால் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்து அமோக ஆதரவுடன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

செம வரவேற்பு

செம வரவேற்பு

அக்கவுன்டன்டாக வாழ்க்கையைத் துவக்கிய விஜய் சேதுபதி, கூத்துப்பட்டறையில் இணைந்து, படங்களில் சிறு சிறு வேடங்களில் அறிமுகமாகி, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இன்று வளர்ந்து நிற்கிறார். மிகக்குறைந்த காலத்தில் அவரது உழைப்பால் உயர்ந்து தமிழ் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். அவரது ஸ்டைலுக்கும், டயலாக் டெலிவரிக்குமே தியேட்டர்களில் தெறிக்கிறது கைதட்டல்!

கார்த்தி

கார்த்தி

9% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் இருப்பவர் கார்த்தி. 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூகம் ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருக்கிறார் இவர். கமர்சியல் கலந்த உண்மைச் சம்பவ படமான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் ரொமான்ஸ், ஆக்‌ஷன் என தேவைக்கேற்ப நடித்து கம்ப்ளீட் பேக்கேஜாக உருவாக்கியதில் கார்த்திக்கு பெரும் பங்கு உண்டு. 'காற்று வெளியிடை' கொஞ்சம் சறுக்கல்.

மாதவன்

மாதவன்

8.46% சதவீத வாக்குகளுடன் கார்த்தியை விட சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் மூன்றாமிடம் பிடித்திருக்கிறார் மாதவன். சாக்லேட் பாயாக அறிமுகமான மாதவன், 'விக்ரம் வேதா'வில் காட்டியது வெறித்தனம். ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆபிஸராக என்கவுன்டரில் போடுவது, வரம்பு மீறாத ரொமான்ஸில் கலக்குவது என செம மாஸாக கலக்கிய மாதவனின் இனி வரும் படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுவது நிச்சயம்.

தனுஷ்

தனுஷ்

நடிகர் தனுஷ், கடந்த வருடம் இயக்குநராகவும் அறிமுகமானார். 'ப.பாண்டி', 'வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படங்களில் நடித்த தனுஷ் 4.58% வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இந்த ஆண்டு ஹாலிவுட்டில் அறிமுகமாகும் படத்தையும் எதிர்நோக்கியிருக்கும் தனுஷுக்கு ஏறுமுகம் தான். தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகம் காட்டும் தனுஷிடம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம்.

விதார்த்

விதார்த்

நடிகர் விதார்த் நடித்து கடந்த ஆண்டில் வெளியான 'ஒரு கிடாயின் கருணை மனு, 'குரங்கு பொம்மை', 'விழித்திரு' ஆகிய படங்கள் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. கூத்துப்பட்டறை மூலம் அறிமுகமாகி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்திவரும் விதார்த்துக்கு ரசிகர்கள் ஆதரவு இந்தாண்டு இன்னும் பெருகும் என எதிர்பார்க்கலாம்.

English summary
Vijay Sethupathi chooses to be the best actor of the year 2017 according to readers votes. Vijay Sethupathi, who is acted in the film 'Vikram Vedha', has been welcomed by more fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X