»   »  2017-ன் சிறந்த ஒளிப்பதிவாளர் யார்? #BestOfTamilCinema2017 #FilmibeatPolls

2017-ன் சிறந்த ஒளிப்பதிவாளர் யார்? #BestOfTamilCinema2017 #FilmibeatPolls

Posted By:
Subscribe to Oneindia Tamil
தமிழ் சினிமாவின் 2017-ன் சிறந்த ஒளிப்பதிவாளர்- வீடியோ

சென்னை : தமிழ் சினிமாவில் கடந்த வருடம் சிறப்பாகப் பங்களித்தவர்கள் யார் என வெவ்வேறு பிரிவுகளில் நமது தளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தினோம்.

அவற்றில் நடிகர்கள் மட்டுமல்லாது டெக்னிகல் பிரிவுகளில் இருப்பவர்கள் பற்றிய கருத்துக்கணிப்புகளுக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வாக்களித்திருந்தனர்.

வாசகர்களின் வாக்குகளின் அடிப்படையில், 2017-ம் ஆண்டின் சிறந்த ஒளிப்பதிவாளராக 'விக்ரம் வேதா' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பி.எஸ்.வினோத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர்

ஒளிப்பதிவாளர்

இயக்குநரின் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல செயல்பட்டு படத்தின் காட்சிகளை ரசிக்கும்படியாக காட்சிப்படுத்துபவர்கள் ஒளிப்பதிவாளர்கள். திரைப்படத்தை கண்களுக்கு விருந்தாகவும், ரசிகர்களுக்கு சுவையாகவும் அள்ளித் தெளிப்பவை ஒளிப்பதிவாளர்களின் கேமராக்கள். ஒவ்வொரு படத்தின் வெற்றியில் ஒளிப்பதிவாளர்களின் பங்கு அசாத்தியமானது.

சிறந்த ஒளிப்பதிவாளர் 2017

சிறந்த ஒளிப்பதிவாளர் 2017

அந்த வகையில், 'சிறந்த ஒளிப்பதிவாளர் 2017' ஆகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர் பி.எஸ்.வினோத். 'விக்ரம் வேதா' படத்தின் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத் 58% வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். ஃப்ளாஷ்பேக் காட்சி, கேங்க்ஸ்டர் காட்சி என வித்தியாசம் காட்டி அசத்தலான கலர் டோன் மூலம் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார் வினோத்.

ஷெல்லி காலிஸ்ட்

ஷெல்லி காலிஸ்ட்

'அருவி' படத்தின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்ட் 16% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். அருவியின் குழந்தைப் பருவ காட்சிகளை அவ்வளவு அழகாகப் படம் பிடித்ததாகட்டும், பின்னால் வரும் டி.வி செட் காட்சிகளை குறைந்த ஒளியில் படம் பிடித்ததாகட்டும், காட்சியின் வழி கதை சொல்லிய ஷெல்லிக்கு ரசிகர்கள் சார்பாக பெரும் வரவேற்பு.

சந்தோஷ் சிவன்

சந்தோஷ் சிவன்

'ஸ்பைடர்' படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். பிரமாண்ட ஸ்டன்ட் காட்சிகள், குண்டுவெடிப்புக் காட்சிகளை முடிந்தவரை சிறப்பாகப் பதிவு செய்து படத்தின் தரத்தைக் கூட்டியதில் பெரும் பங்கு சந்தோஷ் சிவனுக்கு. 12% வாசகர்களின் ஆதரவைப் பெற்று மூன்றாமிடம் பிடித்திருக்கிறார் இந்த கேமரா காரர்.

தேனி ஈஸ்வர்

தேனி ஈஸ்வர்

8% வாக்குகளைப் பெற்று நான்காமிடத்தில் இருப்பது 'தரமணி' படத்தின் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். காட்சிகள் கடத்தவேண்டிய உணர்வுக்குத் தகுந்தபடி குளுமையான கடல், தகிக்கும் வெயில் என தன் கேமரா மூலம் ரசிகர்களின் மனங்களை ஊடுருவிய தேனி ஈஸ்வர் பெரிதும் கவனிக்கப்பட்டார்.

'சோலோ' ஒளிப்பதிவாளர்

'சோலோ' ஒளிப்பதிவாளர்

தனுஷ் இயக்கிய 'ப.பாண்டி' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ் ஐந்தாமிடத்தையும், 'சோலோ' படத்திற்கு நான்கு விதமான கதைகளுக்கும் நான்கு விதமான பொருள்களை உணர்த்தும் கலர் டோன் பயன்படுத்தி பாராட்டுகளைப் பெற்ற கிரிஷ் கங்காதரன் ஆறாம் இடத்தையும் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் மீதும் இந்த வருடமும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

English summary
Tamil filmibeat conducted a survey on different sections about Tamil cinema 2017. Based on the readers votes, PS Vinod has been selected as the best cinematographer of 2017 for the film 'Vikram Vedha'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X