»   »  வாசகர்கள் தேர்ந்தெடுத்த சிறந்த காமெடியன் 2017! #BestOfTamilCinema2017 #FilmibeatPolls

வாசகர்கள் தேர்ந்தெடுத்த சிறந்த காமெடியன் 2017! #BestOfTamilCinema2017 #FilmibeatPolls

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ் சினிமாவில் கடந்த வருடம் சிறப்பாகச் செயல்பட்ட காமெடி நடிகர் யார் என என நமது தளத்தில் வாசகர்களிடம் சர்வே எடுத்தோம்.

நமது வாசகர்கள் ஆயிரக்கணக்கானோர் வாக்களித்து தங்களது ஆதரவைக் கொடுத்தனர். வாசகர்களின் விருப்பத்தின் அடிப்படையில் சிறந்த காமெடியனாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யோகி பாபு.

தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த காமெடியன்கள் லிஸ்ட்டில் உங்களது ஃபேவரிட் நடிகர் எந்த இடம் பிடித்திருக்கிறார்?

சிறந்த காமெடியன்

சிறந்த காமெடியன்

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வடிவேலு இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தார். விவேக் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களால் பெரும் பாராட்டைப் பெற தவறினார். ஹீரோவாகிவிட்ட சந்தானம் காமெடியனாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை ( எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் கெஸ்ட் ரோல்). இந்த மூவரும் இந்த வருட கருத்துக்கணிப்பில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

சிறந்த காமெடியன் 2017

சிறந்த காமெடியன் 2017

வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோர் கலக்காததால் யோகிபாபு, சூரி, சதீஷ், ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பல படங்களில் நடித்தனர். அவர்களில் வாசகர்களின் வாக்குகள் அடிப்படையில் சிறந்த காமெடியனாக யோகி பாபு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

யோகிபாபு

யோகிபாபு

47% வாக்குகளைப் பெற்ற யோகிபாபு, கடந்த வருடத்தில், 'எனக்கு வாய்த்த அடிமைகள்' படம் தொடங்கி வருட இறுதியில் வெளிவந்த 'பலூன்' படம் வரை ரசிகர்களை குலுங்கிச் சிரிக்க வைத்தார். யோகிபாபு நடிப்பில் கடந்த வருடம் 13 படங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

சூரி

சூரி

24% வாக்குகள் வாங்கி இரண்டாவது இடத்தை காமெடியன் சூரி பெற்றிருக்கிறார். சூரி கடந்த ஆண்டு 'சிங்கம் 3' உட்பட 12 படங்களில் நடித்திருக்கிறார். பல படங்கள் பெரிதாக வெற்றி பெறா விட்டாலும் இவரது காமெடி ஓரளவுக்கு ரசிகரகளால் ரசிக்கப்பட்டது.

தம்பி ராமையா

தம்பி ராமையா

வாசகர்களின் 13% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார் தம்பி ராமையா. கடந்த வருடம் இவர் நடித்து 'பைரவா', 'வேலைக்காரன்' உட்பட 13 படங்கள் வெளியாகி இருக்கின்றன.

ரோபோ சங்கர்

ரோபோ சங்கர்

8% வாக்குகளுடன் ரோபோ சங்கர் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்த வருடம் பல முக்கியமான படங்களில் நடித்துக் கவர்ந்த இவர் வரும் வருடங்களில் ரசிகர்களின் ஆதரவைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காமெடியன்கள் சதீஷ் 3.4% வாக்குகளையும், கருணாகரன் 3% வாக்குகளையும் பெற்றிருக்கிறார்கள்.

English summary
The survey was conducted on our site as to who was the best comedian in Tamil cinema 2017. Yogibabu was chosen as the best comedian 2017 based on readers votes. Comedian Yogibabu, who won 47% of the votes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X