»   »  சிறந்த இயக்குநர் 2017 யார்? மெர்சல் டைரக்டர் எந்த இடம்? #BestOfTamilCinema2017 #FilmibeatPolls

சிறந்த இயக்குநர் 2017 யார்? மெர்சல் டைரக்டர் எந்த இடம்? #BestOfTamilCinema2017 #FilmibeatPolls

Posted By:
Subscribe to Oneindia Tamil
2017-ன் சிறந்த இயக்குனர் இவர் தான் !!- வீடியோ

சென்னை : நம் வாசகர்களிடம் தமிழ் சினிமா 2017 பற்றி வெவ்வேறு பிரிவுகளில் கருத்துக்கணிப்பு நடத்தினோம். ஆயிரக் கணக்கான வாசகர்கள் வாக்களித்து ஒவ்வொரு பிரிவுகளிலும் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

வாசகர்களின் தேர்வுப்படி, 2017-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் சிறப்பாகப் பங்களித்தவர்கள் யார் எனும் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், சிறந்த இயக்குநர் 2017 யார் எனும் பிரிவில் வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று இயக்குநர் ராஜமௌலி முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

சிறந்த இயக்குநர்

சிறந்த இயக்குநர்

கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களின் படங்கள் கூட சோபிக்காமல் ஏமாற்றின. நிறைய புதுமுகங்கள் சிறப்பான படங்களைக் கொடுத்து ஆதிக்கம் செலுத்தினர். அறிமுக இயக்குநர்களுக்கென தனிப்பிரிவு சேர்க்கப்பட்டு, ஏற்கெனவே அறிமுகமான இயக்குநர்கள் மட்டும் இந்தப் பிரிவில் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

சிறந்த இயக்குநர் 2017

சிறந்த இயக்குநர் 2017

அதனடிப்படையில், பெரும் வரவேற்பைப் பெற்ற ஆறு படங்களின் இயக்குநர்கள் இந்தப் பட்டியலில் இருந்தனர். ராஜமௌலி, அட்லீ, ராம், மிஷ்கின், புஷ்கர் - காயத்ரி, ஹெச்.வினோத் ஆகியோர் இடம்பெற்ற இந்தப் பட்டியலில் இருந்து வாசகர்களின் தேர்வு அடிப்படையில் ராஜமௌலி முதலிடம் பெற்றிருக்கிறார்.

பாகுபலி இயக்குநர்

பாகுபலி இயக்குநர்

'பாகுபலி 2' மூலம் உலக அளவில் இந்தியப் படத்தின் வசூல் கொடியை நிலைநாட்டிய ராஜமௌலி 49% வாக்குகளைப் பெற்று 'சிறந்த இயக்குநர் 2017' ஆகத் தேர்வு செய்யப்படுகிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடித் தீர்த்த 'பாகுபலி 2' படத்தின் மூலம் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறார்.

புஷ்கர் - காயத்ரி

புஷ்கர் - காயத்ரி

சிறப்பான நடிப்பு, வித்தியாசமான திரைக்கதை என இந்தாண்டு கவனம் ஈர்த்த படம் 'விக்ரம் வேதா'. இந்தப் படத்தின் இரட்டை இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி 22% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றனர். இவர்களது அடுத்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஹெச்.வினோத்

ஹெச்.வினோத்

'சதுரங்க வேட்டை' எனும் படத்தின் கவனம் பெற்ற ஹெச்.வினோத் இந்தாண்டு இயக்கி வெளிவந்த படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. இயக்குநர் ஹெச்.வினோத் 10% வாக்குகளைப் பெற்று சிறந்த இயக்குநர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

மெர்சல் டைரக்டர்

மெர்சல் டைரக்டர்

குறைந்த காலத்தில் அதிவேகமாக வளர்ந்து விஜய்யை வைத்து இரண்டாவது படத்தையும் எடுத்த அட்லீ இந்தப் பட்டியலில் 9% வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறார். ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற படமாக உருவான 'மெர்சல்' இவரது மேக்கிங்கால் பாராட்டப்பட்டது.

மிஷ்கின்

மிஷ்கின்

விஷாலை வைத்து 'துப்பறிவாளன்' படத்தை இயக்கிய மிஷ்கின் 5.49% வாக்குகளுடன் ஐந்தாவது இடத்திலும், 'தரமணி' படத்தின் மூலம் கவனம் ஈர்த்து விவாதத்தைக் கிளப்பிய இயக்குநர் ராம் 5% வாக்குகளுடன் ஆறாவது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள்.

English summary
We had a survey about Tamil cinema 2017 to our readers. Director SS Rajamouli has been ranked first in the category of best directors of Tamil cinema in 2017. Atlee holds the fourth place with 9% of votes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X